பக்கம்:நான் இருவர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகன் இருவர். “' அவனைப் பற்றி எனக்கு நிச்சயந்தான்.. அதற்குப் பல காரணங்கள் உண்டு ; எனினும் அவற்றைச் சொல்வதற்கில்லை, ஆனால், ஒரு விஷயத்தில் மட்டும் நீ எனக்கு யோசனை சொல்ல லாம். அவனிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது. அதைப் போலீஸாரிடம் ஒப்படைக்கவா, வேண்டாமா என்பதே என் பிரச்சினை, அதை உன் வசமே கொடுத்து விடலாமென எண்ணுகிறேன். நீ தான் அதைப் பற்றித் தீர்மானிக்க வேண் டும். இது விஷயத்தில் உன்னை மனப்பூர்வமாக நம்புகிறேன்." " அது அவன் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்க உதவலாம் என நீ பயப்படுகிறாயா?" என்றார் வக்கீல். “ இல்லை யில்லை. ஹைடுக்கு என்ன நேர்ந்தாலும் அதைப் பற்றி நான் கவலை கொள்ளப் போவதில்லை. அவனுக்கும் எனக்கும் தொந்தம் அற்றுப் போய் விட்டது. இந்த வேண் டாத விவகாரத்தில் என் பெயரும் அடிபடுமே என்று தான் யோசனை." அட்டர்ஸன் சில நிமிஷம் யோசித்தார். தமது நண்பரின் சுயநலத்தை எண்ணி அதிசயித்தார் ; எனினும் உள்ளூர சந்தோ ஷமே அடைந்தார். '" ரொம்ப சரி, அந்தக் கடிதத்தைப் "பரர்க்கலாம் ” என்றார். அந்தக் கடிதம் விசித்திரமான நீட்டெழுத்துக்களால் எழு தப் பெற்று எட்வர்ட் ஹைட் என்று கையெழுத்திடப்பட்டிருந் தது. கடிதத்திலிருந்தது இதுதான் : தனக்காக எவ்வளவோ. உபகாரம் செய்துவந்த டாக்டர் ஜெகிலுக்கு பல . வழிகளிலும் தொல்லை கொடுத்ததாயும், ஜெகில் தமது பாதுகாப்பு விஷய பாக எவ்வித பீதியும் அடையவேண்டியதில்லையென்றும், தான் தப்பித்துக் கொள்ளச் சரியான வழி இருக்கிறதென்றும் அதில் குறிப்பிட்டிருந்தது. வக்கீலுக்கு அந்தக் கடிதம் மிகவும் பிடித்திருந்தது. தான் நினைத்ததற்கு மாறாக அந்தக் கடி தம் இருந்தது. தனது 1.பழைய சந்தேகங்களுக்காகத் தன்னையே அவர் கடிந்து கொண்டார், " சரி. இந்தக் கடிதத்தின் கவர் இருக்கிறதா ?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/39&oldid=1268763" இலிருந்து மீள்விக்கப்பட்டது