பக்கம்:நான் இருவர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான். இருவர் பூல் தளவரிசையைக் காலால் உதைத்துப் பார்த்தான்,

  • இக்கே -அவர் புதைக்கப்பட்டிருக்கலாம்" என்று சொன்னான்.

" அல்ல து தப்பியோடியிருக்கலாம் " என்று சொல்லிக் கொண்டே, செருப்பக்கம் உள்ள கத வுக்குச் சென்றார் அட்டர் வன். 9:து ஆட்டிக் கிடந்தது. தளத்தருகில் ஒரு துருப்பிடித்த சாவியும் கிடந்தது. “ இது உபயோகப் படுத்தப்பட்டதாகத் தெரியவில்லையே! என்றார் வக்கீல். “ ஓ.பயோக!மர ? இது ஒடிந்து போன சாவி என்பதைத் தாங்கள் கவனிக்க வில்லையா? மேலும், யாரோ இதை மிதித் துச் சென்றிருக்கிறார்கள்." ஆமாம். ஒடிந்துபோன இடத்திலும்கூடத் துரு ஏறியிருக் இநதே." அவர்கள் ஒருவரையொருவர் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டனர். "இது என் புத்திக்கு எட்டவில்லை', வா', மேலே போவோம்” என்றார். அவர்கள் மெளன மாய்ப் படியேறி மேலே சென்றனர். பிரே தத்தைக் காணும் போதெல்லாம் நெஞ்சம் திடுக்கிட, அங்குள்ள சாமான்களைப் பரிசீலனை செய்தனர். ஒரு மேஜைமேல், ரசா யன வேலை நடந்த அறிகுறிகள் தென்பட்டன. சில கண்ணாடிச் சில்லுகளில் சில உப்புக்கள் அளந்து போடப்பட்டிருந்தன. ஏதோ ஒரு - ஆராய்ச்சி இடை. வழித்தட்டில் நின்றுபோய் விட்டது * " இதுதான் நான் அடிக்கடி வாங்கி வந்த மருந்துச் சரக்கு என்று சொன்னான், பூல், அவள் பேசும்போது கூட, கெட்டி வில் நீர் கொதித்துப் பொங்கியது. அந்தச் சப்தம் அவர்களை நடுக்கியது. இது அவர்களை நெருப்பின் பக்கம் இழுத்து வந்தது, அங்கே ஒரு சாய்வு நாற்காலி போடப்பட்டு உட்காருபவரின் கையெட் டும் தூரத்திலே, தேத் தண்ணீர் கோப்பையும் வைக்கப்பட்டிருந் தது. அந்தக் கோப்பையில் ஜீனிகூடப் போடப்பட்டிருந்தது !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/64&oldid=1268789" இலிருந்து மீள்விக்கப்பட்டது