பக்கம்:நான் இருவர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலாம். கடவுளின் சந்நிதானத்தில் இதைத்தான் கூறுவேன், அறிவுள்ள 53 ந்த மனிதனும் அந்த அற்பக் காரணத்தால் அறி விழந்து அந்தக் கொடும் பழியைச் சுமந்திருக்க மாட்டான், 6s:யின் நச்சரிப்பைத் தாங்காத குழந்தை எப்படி விளையாட்டுப் பொருளை உடைத் தெறியுமோ, அப்படியே நானும் பொறுப் பற்று நடந்து கொண்டேன். முழு மோசமானவர்களுக்கும் இம் மாதிரியான சோதனைகளில், தம்மைத் தாமே சுதாரித்துக் காப் பாற்றும் சில அபூர்வ குணங்கள் உண்டு. அந்தக் குணங்களை யெல்லாம் நான் வேண்டுமென்றே உதறி அடித்து விட்டதனால், எப்போது நெஞ்சம் தடுமாறினாலும், நான் தவறி விடுவேன். அது முதல், 'என்னுள் கிடந்த நரகக் குணம் விழித்தெழுந்து வீறுடன் கிளம்பிற்று. மகிழ்ச்சியிலே என் உடம்பை தானே அடித்து வதைத்தேன்; அந்த இன்ப வேதனையிலே - மகிழ்ந் தேன். எனக்கே களைப்பேற்பட்ட பின் தான், என் பித்துக்குளித். தனத்தின் ஜன்னி வெறியி னூடே, என் இதயத்தில் பயம் குளிர்ந்தோடிப் பாய்ந்தது. மயக்கம் தெளிந்தது, என் வாழ்க்கை லக கிடந்து விட்டதாக உணர்ந்தேன். என்னுடைய தீய குணத் தின் தீரா ஆவல் தணிந்த அந்த இடத்திலிருந்து தப்பி ஓடினேன், உயிராசை என்னை முற்றும் பற்றியது: ஸோஹோவிலிருந்த வீட்டுக்குச் சென்று அங்கிருந்த காகிதங்களை யெல்லாம் 157ச மாக்கினேன். பிறகு விளக்கெரியும் தெருக்கள் வழியாகத் தப் பிச் சென்றேன். என் குற்றத்தின் வெற்றியும், பயமும் மனத்தை உலுப்பின. செல்லும் வழியெல்லாம் மேற்கொண்டு என்னென்ன செய்வது என்பதைப்பற்றி யோசித்துக் கொண்டு போனேன்: யாரேனும் பின் தொடர்கிறார்களா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றேன். வீடு சென்றும் மருந்தைக் கலந்து குடித்த பின் தான் ஹைடுக்கு உயிர் வந்தது. உருமாற்றத் தின் வேதனைகள் ஓய்ந்து, ஹென்றி ஜெகில் - உ.ருவானவுடன் அவன் கண்ணீர் விட்டு அழுதான். பரிதாப உணர்ச்சி அவனைப். பற்றியது. நன்றியறிதலோடு கடவுளை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டான். சுயநல மித்தனம் என்னிடமிருந்து விலகிய பின், என் வாழ்க்கையை முழுதாகக் கவனித்துப் பார்த்தேன். சிறு குழந்தையாயிருக்கும்போது, அப்பாவின் கையைப்பிடித்து நடை பழகிச் சென்ற காலத்திலிருந்து, சொந்த ஆசா பாசங்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/90&oldid=1268819" இலிருந்து மீள்விக்கப்பட்டது