பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

நிலமும் சீரான பருவமும் இருந்தும் மக்களே வறுமை வாட்டிற்று என்று குறைபட்டார்.
1917ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சிக்குப் பின், நிலைமை அடியோடு மாறிவிட்டது. கல்வி மடையைத் திறந்துவிட்டார்கள். கல்வியென்னும் உயிர் நீர் ஊர்தேடிப்பாய்ந்தது. இன்று 6,400 பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,500 பள்ளிகள் முழு உயர்நிலைப் பள்ளிகள். 3,000 பள்ளிகள் எட்டாவதோடு நிற்பவை. பாக்கியுள்ள 1,900-ம் நான்காவது வரை கற்றுக் கொடுப்பவை. அன்று இருந்த 160 பள்ளிகளோடு இன்றிருக்கும் 6,400ஐ ஒப்பிட்டுவிட்டு'எங்கள் வளர்ச்சியை மதிப்பிடுங்கள்' என்று தோழர் கதிரவ் கூறினர். அவர் கண்களில் தனி ஒளியைக் கண்டோம். 'ஒளிபடைத்த கண்ணினாய் வா,வா,வா’ என்ற பாரதி பாடல் நினைவிற்கு வந்தது. எங்கள் குழுவின் தலைவர், என்னைப் பார்த்து முறுவலித்தார். கல்வியில் தமிழ்நாடும் இப்படித்தானே வளர்கிறது என்று கண்ணாலே பேசினர், அவர் நம் நிலை, நமக்குத் தெரியாவிட்டாலும், தில்லியில் உள்ள அவருக்குத் தெரியுமே! உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை’ என்பதை உணர்ந்த என் கண்களிலும் ஒளி பிறந்தது
அன்று கல்லூரிக் கல்விக்கே இடமில்லாத அம் மாநிலத்தில், இன்று இரு பல்கலைக் கழகங்கள் உள்ளன. முப்பது கல்லூரிகள் - பலவகையான பாடங்களுக்கு-உள்ளன. ஒரு பல்கலைக் கழகம் டாஸ்கண்ட் நகரத்திலும் மற்றோன்று சாமர்கண்டிலும் உள்ளது. முன்பு மொகலாய மன்னர்