உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

உள்ள புடலைப் பந்தரைப்போல. அவற்றிற்கு எதிரே, பல அடுக்கு மாளிகைகளைப் புதிதாகச் சர்க்கார் கட்டிக்கொண்டிருப்பதைக் கண்டோம். தொழிற்கூடங்களையும் புதிதாகி அமைத்துக் கொண்டுள்ளனர்.
எங்களை இரண்டு கலை நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்றனர். ஒன்று நாடகம், மற்றோன்று இசைக் கூத்து. இரண்டையும் மக்கள் நன்கு இரசித்தனர். ஆனால் ஒன்றிலும் பால்வெறி இல்லை. நாடகத்தின் கதை இதுதான்.
கூட்டுப் பண்ணேயிலே ஒரு குடும்பம். அதிலே ஒரு நங்கை. மற்றோரு வீட்டிலே ஒரு காளை. இருவருக்கும் காதல். இதை அறியார் பெற்றோர்.ஆகவே மணமகள் தேடும் வேலையில் ஈடுபடுகிறார்கள். ஒரு நல்லாளைக் கண்டு அவன் பெற்றொரும் பேசி முடிக்கிறார்கள். வீட்டுப் பெண்ணிற்கும் பெற்றோர் தேடிப் பிடித்த வாலிபனுக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டது. இதை அறிந்தனர் காதலர். திட்டமிட்டனர் இருவரும். வீட்டை விட்டுக் கிளம்பினர். இருவரும் சேர்ந்து வெளியூர் செல்கின்றனர். சிறிது நேரத்தில், பெண்ணின் பெற்றோர் இவ்வுண்மையை அறிந்தனர். என்ன செய்வார்கள் ? ஒடிப்போன பெண்ணேத் தேடிப் புறப்பட்டனர். மாப்பிள்ளை, சும்மா இருந்தாரா ? இல்லை. அவரும் தேடி ஓடினார். ஒடிப்போன காதலர்களைக் கண்டார். நிறுத்தினார். மற்றவர்கள் வருவதைச் சொன்னார். வாள் ஏந்தவுமில்லை. வேல் எடுக்கவுமில்லை. கல்லெடுக்கவுமில்லை.