பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114 ♦ நான் கண்ட பெரியவர்கள்


இப்படிப்பட்ட குழப்பங்கள் வராமல் பார்த்துக்கொள்’ என்றார்கள். ‘அவ்வாறு செய்ய முடியாது. நான் பேசுவதை விரும்பவில்லையென்றால் என் பெயரை எடுத்துவிடுங்கள். விட்டால் என் விருப்பம்போல்தான் பேசுவேன்’ என்று கூறிவிட்டேன். பிரச்சினை பெரிதாகிவிடவே, என் தந்தையார் முதல் பலரையும் ம.பா. கண்டு பேசினார். என்னைத் திருத்த முடியாது என்று எல்லோரும் முடிவு செய்த நிலையில், திரு.வி.க. சொன்னால் நான் கேட்பேன் என்று யாரோ கூறிவிட்டனர். மகிழ்ச்சியடைந்த ம.பா. திரு.வி.க.விடம் சென்று நடந்தவற்றையெல்லாம் கூறிவிட்டு, என்னையும் வரவழைத்து அவர் எதிரே நிறுத்தி, ‘இப்பொழுது நீங்கள் சொல்லுங்கள்’ என்று வேண்டிக் கொண்டார். ‘நீங்கள் கவலைப்படாமல் போங்கள்; நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்றார். திரு.வி.க. ம.பா. திருப்தியுடன் திரும்பிவிட்டார். சில நிமிடங்கள் கழித்து, ‘சம்பந்தா, வா கெடிலத்தில் போய்க் குளித்துவிட்டு வரலாம்’ என்றார். சில நிமிடங்கள் கழித்து அவருடைய உலர்ந்த துணிகள் என்னுடைய துணிகள் ஆகியவற்றை ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு அவர் பின்னர்ச் சென்றேன். சிறிது துரம் சென்ற பிறகு, ’அடே முட்டாள், அவர்கள் எதையாவது கேட்டால், ‘சரி சரி அப்படியே செய்கிறேன்’ என்று சொல்லிவிடுவதுதானே? மேடையில் நீ பேசத் தொடங்கிவிட்டால் அப்புறம் உன்னை அவர்கள் என்ன செய்ய முடியும்? இவர்களுக்கெல்லாம் அப்படித்தான் பாடம் கற்பிக்க வேண்டும். நான்தான் தலைவன். நீ உன் விருப்பம்போல் பேசு’ என்று கூறிவிட்டார். நாங்கள் குளித்து முடித்து விட்டு வந்தவுடன் ம. பா. ‘என்ன திருந்திவிட்டாயா?’ என்றார். ஆகா, நன்றாகத் திருந்தி விட்டேன்’ என்றேன். அன்றைய பேச்சு சைவத்தின் உயிர்நாடியே அன்பு என்று தொடங்கி, ‘அன்பும் சிவமும்’ இரண்டுமே ஒன்றுதான் என்று திருமூலரின் பாடலைச்