பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234 ♦ நான் கண்ட பெரியவர்கள்


சண்முகப்பிரியா பாடிக்கிட்டிருந்ததைக் கேட்டேன்” என்றார். சிரித்துக்கொண்டே “கேள்வி ஞானத்தால் பாடுவதைத் தவிர முறையாக இசை பயிலவில்லை. ஓரளவு தேவாரம் பாடத் தெரியும்” என்றேன்.

சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்துவிட்டுச் “சாயங் காலம் தம்பி பேசும்போது நானும் வந்து கேட்கலாமா?” என்றார். “எல்லோரும் வரலாம். முடிந்தால் நீங்களும் வாருங்கள்” என்றேன். மாலையில் கூட்டம் தொடங்கியவுடன் பிள்ளையவர்களும் அங்கே வந்துவிட்டார். கூட்டத்தில் ஒரே பரபரப்பு. பலர் எழுந்துசென்று அவரை வரவேற்று முன்வரிசையில் அமருமாறு செய்தார்கள். கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் “தம்பி பேசுறேன்னு சொல்லிச்சு, அதைக் கேக்கிறதுக்குத்தான் வந்திருக்கேன்” என்றார். மிக்க ஆர்வத்தோடு சொற்பொழிவைக் கேட்டார். சொற்பொழிவு முடிந்தவுடன் அவர் கேட்ட ஒரு கேள்வி இன்னும் என் மனத்தைவிட்டு நீங்கவில்லை; “ஏன் தம்பி! இப்படியொரு பெண்ணைக் கட்டிக்கிட்டு, அத்தனைவரிசம் குடும்பம் நடத்தி, அந்தப் பொண்ணு இன்னாரின்னு தெரிஞ்சுக்கவே இல்லையே. இவனெல்லாம் என்ன மனிசன்?” பிள்ளையவர்களின் வினாவிற்கு இன்னும் விடை தெரியவில்லை; யாரும் சொல்லமுடியும் என்று நம்பவும் முடியவில்லை.

அக்காலத்தில் திருவாவடுதுறை ஆதீனகர்த்தராக இருந்த மகாசந்நிதானம் அவர்கட்குப் பட்டினப் பிரவேசம் அன்றிரவு நடைபெறுவதாக இருந்தது. திருவாவடுதுறை ஆதீன வித்துவானாகிய திரு. பிள்ளையவர்கள் அன்றிரவு நாதஸ்வரம் வாசிப்பதற்காகவே நாகர்கோவில் வந்திருந்தார். இரவு எட்டு மணிக்குமேல் பட்டினப் பிரவேசம் தொடங்கிற்று. மேளம் வாசிக்கின்றவர்கள் நடந்துகொண்டு வாசிக்காமல் ‘சகடை’ என்ற ஒரு வாகனத்தின்மேல்