பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244 ♦ நான் கண்ட பெரியவர்கள்


நாட்களாக வானொலிக்கு வாராமல் இருந்து இப்பொழுது வந்துள்ள கலைவாணரின் பேச்சைப் பல இலட்சம் மக்கள் ரசித்துக்கொண்டிருப்பார்கள். திடீரென்று நிறுத்தினால் விளைவு மோசமாகிவிடும். இதனை உணர்ந்த நாங்கள் நடப்பது நடக்கட்டும் என்ற முறையில் நிகழ்ச்சி நடைபெறுமாறு விட்டுவிட்டோம்.

கலைவாணர் பேச்சு இலட்சக்கணக்கான ரசிகரின் உள்ளத்தில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்திவிட்டது என்பது உண்மைதான். நிகழ்ச்சி நல்லமுறையில் முடிந்தது.

இருபது நாளைக்குப் பிறகு விதி விளையாடத் தொடங்கியது. அப்பொழுது வானொலித் துறைக்கு அமைச்சராக இருந்த கேஸ்கர் என்பவர் நிலைய இயக்குநர் மேனனைத் தொலைபேசியில் அழைத்துப் “புரட்சி உண்டாக்கும் வகையில் கலைவாணரைப் பேசவிட்டீர்களாமே! அது சட்டவிரோதமானதென்று உங்களுக்குத் தெரியாதா? நாடகத் தயாரிப்பாளராகவுள்ள அ. ச. ஞா. விடம், விரிவான விளக்கம் கேட்டு எழுதி வாங்கி எனக்கனுப்பவும்” என்று கூறிவிட்டார்.

இயக்குநர், துணை இயக்குநர், நான் ஆகிய மூவரும் ஒன்றாக அமர்ந்து, இதற்கு என்ன செய்வதென்று சிந்தித்தோம். கலைவாணர் எழுதித் தந்திருந்த பேச்சு என் கைவசம் இருந்தது. அந்த அடிப்படையில், இது தவிர வேறொன்றும் நடைபெறவில்லை என்று எழுதிவிட்டோம். இதனால் ஏதாவது சிக்கல் வந்தால் புதிதாகப் பணியிற் சேர்ந்துள்ள எனக்குப் பிரச்சினை எதுவும் வரக்கூடாது என்பதற்காக டாக்டர் நாராயண மேனன் இந்த விளக்கத்தைத் தாமே எழுதி அமைச்சருக்கு அனுப்பிவிட்டார். விதி மூலையில் நின்று சிரித்துக் கொண்டிருந்தது. கலைவாணர் பேச்சை யாரும் ஒலிப்பதிவு செய்யவில்லை ஆதலால் நாங்கள் எழுதியதற்கு மாறாக