பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



50 ♦ நான் கண்ட பெரியவர்கள்


என்று சிறப்புப் பெற்றவருமாகிய , அமரர் க. வெள்ளைவாரணனார் இந்த ஆராய்ச்சிக்குப் பெரிதும் உதவியாகவிருந்தார். வேலையை விட்ட பிறகு திருக்கொள்ளம்பூதூர் சென்று நீண்டகாலம் தங்கியிருந்து ‘யாழ்நூல்’ என்ற பெயரில் தம் அரிய ஆராய்ச்சிநூலை வெளியிட்டார். அற்றைநாள் தமிழறிஞர்கட்கு இல்லாத ஒரு பெருஞ்சிறப்பு அடிகளாரிடம் இருந்தது. இயற்பியலில் பட்டம் பெற்ற அவர் ஆங்கிலம், தமிழ், வடமொழி ஆகிய மும்மொழிகளிலும் பெரும்புலமை இருந்தார். தமிழிற் காணப்படும் சிறப்புக்களுக்கு ஆங்கிலம், வடமொழி என்பவற்றிலிருந்து சிறந்த ஒப்புமைப் பகுதிகளை எடுத்துக்காட்டக்கூடியவர்.

1939ஆம் ஆண்டில் செட்டிநாட்டிலுள்ள ஆவினிப்பட்டி என்ற ஊரில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடாகியிருந்தது. அக்கூட்டத்திற்கு அடிகளார் தலைமை தாங்கினார். நான் எடுத்துக்கொண்ட தலைப்பு, ‘கவிச்சக்கரவர்த்தி’ என்பதாகும். ஆங்கிலம், தமிழ் என்ற இருமொழியிலும் வல்லுநராகிய மற்றொரு பேராசிரியரும் இதே தலைப்பைத் தந்திருந்தார். சுவாமிகள் என்னைச் சந்தித்து ‘அப்பேச்சாளர் கம்பனில் அதிக நாட்டம் கொண்டவர், நீயும் கம்பனையே பேசினால் நன்றாக இராது, வேறொரு புலவனை எடுத்துக்கொண்டு பேசுக’ என்று கூறினார். அதற்கு உடன்பட்ட நான் பாரதியைப் பற்றிப் பேசுவதாக ஒப்புக்கொண்டேன். அப்பொழுது இலக்கிய உலகில் பாரதி அதிகம் செல்வாக்குப் பெற்றிராத காலம். சுவாமிகளுக்கே பாரதி பாடல்களில் பயிற்சி இருந்ததா என்பது எனக்குத் தெரியாது.

முதலிற் பேசிய அத்தமிழ்ப்புலவர் நல்ல தமிழறிவு, கம்பனில் பயிற்சி என்பவை நிரம்பப் பெற்றவராயினும் அவரிடம் ஒரு குறையிருந்தது. நேரங்கெட்ட நேரத்தில் குடித்துவிடுவார். அன்று கூட்டம் தொடங்குமுன் நிறைய