பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



70 ♦ நான் கண்ட பெரியவர்கள்



1929 என்று நினைக்கின்றேன் பி.டி.இராஜன் நீதிக்கட்சியின் அமைச்சரவையில் ஒர் அமைச்சராக அமர்ந்து 1937வரை அப்பதவியை வகித்து வந்தார். இன்று நாரதகான சபை இருக்குமிடத்திற்கு எதிரே ஒரு பெரிய மாளிகையில் பி.டி.இராஜன் குடியிருந்தார். மிக இளமையிலேயே இங்கிலாந்து சென்றுவிட்டமையின் பி.டி.இராஜன் தமிழில் பேசுவதற்கு ஓரளவு சிக்கல் இருந்து வந்தது. ஆனால் 1932இல் தினந்தோறும் வடபழநிக்குச் சென்று முருகனை வழிபட்டு வருவதை அவர் மறந்ததேயில்லை. அந்நாட்களில் வடபழனி முருகன் ஒரு சிறிய கருவறையில் இருந்து அருள் பாலித்து வந்தான். இன்று அக்கோயில் மிகப்பெரியதாக வளர்ந்து பெரிய கட்டடங்களுடன் நிலவுவதற்கு மூலகாரணமாகவும் முதற்காரணமாகவும் இருந்தவர் பி.டி.இராஜனே ஆவார். அமைச்சராக இருந்தபொழுது மோபரீஸ் ரோட்டில் (T.T.K.சாலை) அமைந்திருந்த அவருடைய இல்லத்திற்குச் சென்று வந்துள்ளேன். அது ஓர் அமைச்சர் வீடுபோலக் காட்சியளிக்காது. உண்மையைச் சொல்லவேண்டுமானால் மதியம் 11 மணியிலிருந்து பிற்பகல் 2 மணிவரை அமைச்சரின் இல்லம் ஓர் அன்னசத்திரமாகவே காட்சியளிக்கும்.

யார் எவரென்பது இல்லாமல் யார்வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து, இலையில் அமர்ந்து, உணவு உண்டு களிப்புடன் வெளியே செல்வதை நானே கண்டிருக்கின்றேன். இதுகண்டு நான் வியப்படைந்தபொழுது, அமைச்சருக்கு அணுக்கமாக இருந்துவந்த என் ஒன்றுவிட்ட சகோதரர் ஆதி நாராயணன் என்னைப் பார்த்து வியப்பதற்கு இதிலொன்றுமில்லை. அமைச்சரின் மதுரை வீட்டில் அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அன்றாடம் நடைபெறும் செயலாகும் இது. மதுரையில் அவர் வீட்டைப் பார்க்காததால் உனக்கு இந்த வியப்பு ஏற்பட்டது. இராமன் இருக்குமிடந்தான் அயோத்தி என்று சொல்வதை நீ