பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76 ♦ நான் கண்ட பெரியவர்கள்



அன்னை மீனாட்சியின் தொண்டர்கள் நிறைவாழ்வு வாழ்ந்தவர்கள்; வாழ்பவர்கள் என்பதற்கு இருபதாம் நூற்றாண்டின் முன்னுதாரணம், பி.டி.ஆர் என்ற மாமனிதராகிய பொன்னம்பலத் தியாகராஜன் ஆவார்.


12. ம. பா. வும் தி. கி. நா. வும்


மர்ரே ராஜம் அவர்கள் தமிழ் இலக்கியங்களை அடக்க விலையில் வெளியிட வேண்டும் என்று தீவிரமாக நினைந்ததற்கு முன்னோடியாக இருந்தவர் மணலி குடும்பத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் செயலராகப் பல்லாண்டு பணி புரிந்தவருமாகிய ம.பாலசுப்பிரமணிய முதலியாரவர்கள். 1932 தொடங்கி, 12 திருமுறைகளையும் ஏடு பார்த்துச் செவ்விய முறையில் பாடல்களை அச்சிட்டு அடக்க விலைக்குத் தந்தார் ம.பா. இதுவே மர்ரே ராஜத்திற்கு தூண்டுகோலாக அமைந்தது. இரவு பகல் பாராது, தன்னலம் என்பது ஒரு சிறிதும் இல்லாமல் சைவ சமயத்திற்காகவும் சைவத் திருமுறைகளுக்காவும் தம் வாழ்நாளை முழுவதுமாகச் செலவிட்டார் ம.பா அவர்கள்.

சைவசித்தாந்த மகாசமாஜம் என்ற ஒரு நிறுவனம், 1925-இல் இருந்து, வெகு சிறப்பாகப் பணி புரிந்து கொண்டிருந்தது. சைவத் திருமுறைகளை ஏடு பார்த்து, ஒப்பாய்வு செய்து வெளியிட்ட பெருமை சமாஜத்திற்கே உரியதாகும். வையாபுரிப் பிள்ளை முதல் தமிழ்த் தென்றல் திரு.வி.க. வரை பலரும் இப்பணிக்கு உதவினார்களேனும் இவர்கள் அல்லாமல் அந்த நிறுவனம் இருவருடைய தோள்மேல் நிலைபெற்றிருந்தது. இருவரும் பெரும் செல்வர்கள். இருபத்துநான்கு மணி நேரமும் வேறு எப்பணியும் மேற்கொள்ளாமல் சமாஜப் பணியையே