பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - 118

ஈதண்டர் ஆமன்றல் இன்தீஞ் சுவைப்பால்

என்னும்சொல் அன்பிற் குழைத்துப் பகர்வோன் கோதண்ட ராமன் சலாபம் விழைந்தேன்

குலாவித் தமிழ் நூல் குறிக்கொள்வதற்கே’’

என்ற இவரது பாட்டைப் படித்தவுடன் அவருக்கு மிகவும் வியப்பாகிவிட்டது: “எனக்கு இன்னமும் சொந்தமாகப் பாடல் எழுத வருவதில்லை. நீர் நன்றாக எழுதுகிறீரே ! ஸ்ரீமத் ஐயருக்குத் தெரிந்தால் உம்மைப் பெரிதும் கொண்டாடுவார்’ எனப் பெரிதும் புகழ்ந்தார்:

அன்றிலிருந்து அவர் இவருடன் மிகவும் மனம்விட்டுப் பழகினார்: “நீர் செய்த தவத்தினால்தான் ஸ்ரீம்த் ஐயரிடம் தமிழ் படிக்கக் கூடிய பாக்கியம் உமக்குக் கிடைத்திருக்கிற்து’ என இவரைப் பாராட்டினார்.

“தமிழ் நூல்களை ஆழ்ந்து பயில வேண்டும்.முதலில் கடினமாகத் தோன்றினாலும் பல கால் பயின்றால் வரவரத் தெளிவு உண்டாகும். படித்ததை எளிய நடை யில் சொல்லவும், எழுதவும் வேண்டும்’ என ஸ்ரீமத் ஐயர் அடிக்கடி மாணவர்களுக்குச் சொல்வார் என்பதை அவரிடமிருந்து. இவர் அறிந்தார்) ஆசானின் மனக்குறை தீர்ந்தது.

“எத்தனையோபேர் என்னை வந்துபார்க்கிறார்கள், பேசுகிறார்கள்; இன்னது படித்தேன், அதில் இன்னது சந்தேகம், விளக்க வேண்டும் என்று கேட்பவர்கள் அ | ய ரா யிருக்கிறார்களே!’ என ரீமத் ஐயர் அங்கலாய்த்துக்கொள்வார். தமிழ் நூல்களில் சந்தேகம் கேட்பவர்களைக் கண்டால் அவருக்கு மிகவும் பிடிக்கும்: அதை அவர் விளக்கும்போதுதான் அவரது ஆராய்ச்சி ஆயின் ஆழம் புலப்படும். உ ம க் கு ச் சந்தேகமான இடங்களை நீர் பயம் இல்லாமல் அவரிடம் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம்; அப்போதுதான் அந்தத்