பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சத்குருவைத் தேடி

தோற்றம்:

இவர் விசுவாவசு வருடம், ப ங் கு னி மாதம், சனிக்கிழமை 29-ஆம் தேதி (11-4-1906) இரவு கும்ப லக்கினத்தில் பிறந்தார். அநுஷம் இவரது ஜன்ம நட்சத்திரமாக அமைந்தது. ஸ்மார்த்தப் பிராம்மணர் களுள் கெளசிக கோத்திர வடம வகுப்பினராவார்.

இவருடைய தகப்பனார் பெயர் திரு வாசுதேவ ஐயர், தாயார் பெயர் திருமதி பார்வதி அம்மாள். கறுப்பு மச்சம்:

பிள்ளைப்பேறு ம ரு த் துவ மனைகள் அந்தக் காலத்தில் இருக்கவில்லை. வீட்டிலேயே பிரசவத்திற்கு ைவ த் துக் .ெ கா ள் வார் க ள் . பிரசவ அறையில் பெண்களைத் தவிர யாரும் போகமாட்டார்கள்.

பிறந்த குழந்தை அழவில்லையென்றால் குழந்தை யைச் சுற்றி ஒலையைப் போட்டுப் பொசுக்குவார்கள். கணப்புப் போடுவார்கள். குழந்தைக்கு வியாதி எதுவும் வரக்கூடாது என்பதற்காக, பழுக்கப் பழுக்கக் காய்ச்சிய ஊசியினால் குழந்தையின் வயிற்றிலும், கையிலும் சூடு போடுவார்கள். -

இவர் பார்வதியம்மாளுக்குத் தலைப் பிரசவக் குழந்தை யாதலால் எல்லோரும் மிகுந்த கவலையுடன் இருந்தார்களாம். -

இவர் பிறந்தவுடன் அழவில்லையாம். எனவே பிரசவ அறையில் இருந்த பெண்கள் இவரைச் சுற்றி நெருப்பு மூட்டினார்களாம். அதனால் இவரது வலது