பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி I go

கை கரு கி விட்டது என்று இவரது விட்டார் சொன்னதுண்டு உண்மை அதுவன்று:

பி. ற, க் கு ம் .ெ பா மு தே இவரது இடது கை மணிக்கட்டுக்கு மேலே புஜ மூட்டுவரை ஒருகறுப்பு மச்சம் படர்ந்திருந்தது. மணிக்கட்டுக்கு மேலே முழங்கை வரை படர்ந்திருந்த கறுப்பு, நடுவில் ஊசி குத்தியது போன்ற கறுப்புப் புள்ளி மச்சமே தவிர, நெருப்புச் சுட்டதாலோ, பழுக்கக் காய்ச்சிய ஊசிகுத்தியதாலோ ஏற்பட்டதன்று. முந்திரிக் கொல்லைச் சுப்பராயர்

இவருடைய பாட்டனாரின் பெயர் சுப்பராயர். அவர் குட்டையாக, சற்றுக் கருவலாக இருப்பார். அவருக்கு ஏழு ஆண் பிள்ளைகள். பெண் குழந்தையே இல்லை, அந்த ஏழு ஆண் பிள்ளைகளில் இவருடைய தகப்பனார் நான்காமவர்.

சுப்பராயர் சிவபக்தர், கடுமையான உழைப்பாளி யுங்கூட விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். எங்காவது உயர்ந்த ரகச் செடிஒன்று முளைத்திருக்கிறது. என்றால், உடனே கையில் கடப்பாரையை எடுத்துக் கொண்டு போய்விடுவாராம் வேர் அறுந்து விடாமல் அதை மெள்ளத் தோண்டி,அந்த இடத்திலிருந்து எடுத்து வந்து, நல்ல பாதுகாப்பான இடத்தில் அதைத் திரும்பவும் நட்டு. உயிர்த் தண்ணீர் விட்டுவரும் வரை அவர் வேறு எதிலும் கவனம் செலுத்தமாட்டாராம்.

அவர் முந்திரித் தோட்டம் ப்ோட்டிருந்தார். பெரும் பாலும் அங்கேயே இருப்பார். முந்திரிப் பழங்களை எடுத்து வந்து விற்பார். இதனால் அவருக்கு முந்திரிக் கொல்லை சுப்பராயர்’ என்றே பெயர். அவர் தம் கடைசிக் காலத்தில் பஞ்சநதிசுவர கேத்திரமாகிய திருவையாற்றில் இருந்த தம் மூத்த பிள்ளையுடன் வசித்தார். அங்கேதான் இறைவனடி சேர்ந்தார்.

இவருடைய பாட்டியின் பெயர் சுப்புலட்சுமி, சற்றுப் பருமனாக இரட்டை நாடியாக இருப்பாராம்.