பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 12 to

அறிந்துகொள்வதில் மிகவும் நாட்டம் உடையவராக இருந்தார். *.

தமக்குத் தெரிந்தவற்றைக்கூடத் தாமே அதனை வெளிப்படுத்திக்கொண்டதில்லை. த விர, தெரியா, வற்றை அறிந்தவராக எந்தச் சமயத்திலும் இவர் காட்டிக்கொள்ள முற்பட்டதும் இல்லை :

கி.வா.ஜ. பற்றி ஓர் அன்பர்

சமீபத்தில் ஒர் அன்பர். அமார் கி.வா.ஜ. தமக்கு. எழுதிய கடிதம் ஒன்றை அனுப்பினார். அதோடு அவர் எழுதியிருந்தார்.

‘அமரர் கி.வா.ஜ. , தமிழ் உலகில் மலைபோல் இருந்து அடக்கமாக வாழ்ந்து மறைந்தவர். அவரே ஒரு தமிழ் அவருடைய எழுத்தை, பேச்சை, தமிழுலகம் மறக்க முடியாது என்க்கு அவரோடு நேரிடையாகத் தொடர்பு ஏதும் இல்லையென்றாலும் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே மாணவர் மன்றக் கூட்டங்களிலும், பின்னர் இலக்கிய . மேடைகளிலும், தமிழரசுக் கழக இலக்கிய, ம.பொ.சி. பிறந்த நாள் விழாக்களிலும், எழுத்தாளர் கூட்டங்களிலும் அவரைப் பலமுறை பார்த்துப் பேச்சுக்களைக் கேட்டதுண்டு, . . .

“ராமாயணத்தில் ராமனை 14 ஆண்டுகள் என்று குறிப்பிட்டு, காட்டுக்குப் போகச் சொன்னதேன் என்று. 19-8-63-இல் அவரிடம் நான் கேட்ட வினாவிற்கு, அவரிடமிருந்து 25-11-63-இல் ஒரு கடிதம் வந்தது:

கலைமகள், : ----. . 25-11-63. அன்புடையீர், வ்ணக்கம்: .

தெரியவில்லை. என்று உங்களுக்கு விடை சொல்ல வேண்டாமென்று பலரை விசாரித்தேன் பதினான்கு