பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 நாம் அறிந்த கி.வா.ஜ.

வருஷங்களுக்குக் காரணம் தெரியவில்லை. இன்னும் விசாரிக்கிறேன். தெரிந்தால் எழுதுகிறேன்.

- . . அன்பன் . கி.வா. ஜகந்நாதன்: ‘இது அவரது பொறுப்புணர்ச்சியையும், பெருந் தன்மையையும் காட்டியது கண்டு வியந்தேன்’ என அவ்வன்பர் தம் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.”

ஸ்ரீமத் ஐயரும் இதே குணம் உடையவர்தாம்.அன்று கோதண்டராமன் இவரிடம் இரண்டாவதாகச் சொன்ன புத்திமதி, தெரியாதவற்றைத் தெரிந்தனவாக எந்தச் சமயத்திலும் ரீமத் ஐ ய ரி டம் காட்டிக்கொண்டு விடாதீர்! அது அவருக்குக் கொஞ்சமும் பிடிக்காது’’ என்பதேயாகும். -

தம்முடைய இயல்புகளுடன் ரீமத் ஐய ரின் இயல்புகளும் ஒத்திருப்பது அறிந்து இவர் பெரிதும் மகிழ்ந்தார். . . . - சாகித்தியம் வருமா?

திருவிளையாடல் புராணம் பாடம் கேட்டு வரும் போது ஒரு நாள் ஐயரவர்கள். இவரிடம், ‘உமக்குச் சாகித்தியம் வருமா?’ என்று கேட்டார். . . . அவர் சில சமயம் தேவாரப் பாடல்களை மிகவும் இனிமையாக ராகத்தோடு தணிந்த குரலில் பாடுவதை இவர் கேட்டிருக்கிறார்; புத்தகம் எதையேனும் தேடும் போது கோபாலகிருஷ்ண பாரதியாரின் பாடல்களை மெல்லப் பாடிக்கொண்டிருந்ததையும் அறிவார்.

ஸ்ரீமத் ஐயருக்கு தமது குடும்பச் சொத்தான சங்கீதத்தில் இயல்பாகவே பிரியம் இருந்தது.

  • சி. ஞானமணி, பி. லிட், எம். ஏ. (அரசியல்), 11,சஞ்சீவிராயன் கோவில் தெரு, சென்னை-600021: 6-3-89. -

நா-8