பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 122

இவருக்குச் சங்கீதம் வராது. எங்கே நம்மைப் பாடச் சொல்வாரோ என்கிற பயம் இவரைப் பற்றிக் கொண்டது.

கொஞ்சம் வெட்கத்துடன், எனக்குச் சங்கீதம் வராது’ எனச் சொல்லிப் புத்தகத்தில் தலையைக் கவிழ்த்துக் கொண்டார். l

ஐயரவர்கள் ஏதும் சொல்லவில்லை; மேலே

தொடர்ந்து பாடம் கேட்டுவிட்டு, ‘"தப்பித்தோம், பிழைத்தோம்’ என்கிற ரீதியில் அன்றைக்குத் தம் ஜாகைக்கு இவர் வந்துவிட்டார். - - ஆசான் பாடம் சொல்லும் பாங்கு

பிள்ளையவர்கள் பாடம் .ெ ச | ல் லு ம் ேப ா து நூலுக்குப் பொருளுரைப்பதோடு நூலாசிரியர் சம்பந்த மான வரலாறுகளையும் சொல்வாராம். பல தனிப் பாடல் களையும் சொல்வார். இன்னும் சந்தர்ப்பத்திற்கேற்ற பல செய்திகளை எடுத்துரைப்பார், - தம்மிடம் படிக்கும் மாணவர்களுக்குத் தமிழில் செய்யுள் இயற்றும் பழக்கமும் ஏற்பட வேண்டுமென நினைந்து அவ்வப்போது ஏதாவது ஒர் அடியைக் கொடுத்துச் செய்யுள் இயற்றச் சொல்வார்.” -

ஒரு நாள் ஐயரவர்களுக்கு, ‘கந்தா கடம்பா குகா என்கிற வெண்பாவுக்குரிய ஈற்றடியைக் கொடுத்து ஒரு செய்யுள் இயற்றச் சொன்னார். ஐயரவர்கள் ஒரு பாடல் இயற்றினார்: . -

‘'நானும் ஒரு பாடல் இயற்றியிருக்கிறேன். கேள்’

. இதனைச் சமஸ்யை, சமுத்தி என்பர். மீ.சு: பிள்ளையவர்கள் சரித்திரம். . .