பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 23 நாம் அறிந்த கி.வா.ஜ.

பாடப் படிக்கப் பயனா நினக்கன்பு

கூடக் கருணை கொழித்தருள்வாய்-தேடவரும் மந்தா கிலந்தவழு மாயூர மாநகர்வாழ் கந்தா கடம்பாகு கா’ - என்கிற வெண்பாவைப் பிள்ளையவர்கள் சொன்னார். கள். -

இப்படிப் பிள்ளையவர்கள் தமிழை இன்பம் தரும் விளையாட்டாகக் கருதி வாழ்ந்ததோடு, தம்மிடம் படிக்கும் மாணவர்களுக்கும் தமிழ்க் க ல் வி ைய விளையாட்டாகவே போதித்து வந்தார்.

இவ்வாறு தாம் தம் ஆசிரியரிடம் கற்ற முறைப்படியே - ஸ்ரீமத் ஐயரும் இவருக்குத் தமிழைக் கற்பித்து வந்தார்) செய்யுள் இயற்றவும் இவருக்குக் கற்றுக்கொடுக்க எண்ணினார் போலும்!

அடுத்த நாள் இவர் பாடம் கேட்க வரும்போது ஒரு பாடலை எடுத்துக்கொண்டு அதில் அமைந்துள்ள எதுகை மோனைபற்றி எடுத்து விளக்கினார் ஐயரவர்கள்:

செய்யுளில் பொருள் எவ்வாறு ஒவ்வோர் அடியிலும் ஒழுங்குபடுத்தி வைக்கப்பட்டுள்ளது எ ன் ப ைத ச் சொன்னார். எந்தச் சொல்லை எதுகையில் வைத்துப் பாட்டைத் துவங்கினால் மற்ற அடிகளின் எதுகையில் மோனையும் எளிதில் அமையும் எ ன் ப ைத யு. ம் விளக்கினார்: - * *

முருகனின் திருவருளால் கவிபாடும் ஆற்றல் சிறுவயது முதலே இவரிடம் இருந்தது. என்றாலும், யாப்பிலக்க ணத்தை இவர் முறையாகப் படித்ததில்லை, அதனை ஐயரவர்கள் விளக்கியபோது இவர் மிகவும் மகிழ்ச்சி கொண்டார்).

ஆசான் தந்த ஊக்கத்தின் விளைவு

அன்று இரவு பாடம் முடிந்துவிட்டது. படுத்துக் கொள்ளப் போகும் நேரம் அது. இவர் தம் ஜாகைக்குக்