பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி 14

தருவார்கள். பச்சைப் பயற்றம் மாவு, வெல்லப்பாகு ஆகியவற்றைக் கொண்டு சுக்குத் தட்டிப்போட்டு லாடு போல் உருண்டையாகத் தயார் செய்யும் தின்பண்டத் திற்கு தான் பொருள்விளங்கா உருண்டை என்று பெயர்:

இது இவருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் @5 பெயரைச் சொல்லத்தான் வராது. புடலங்காய் உருண்டை கொடு’ என்று கேட்பாராம். அதனால் அந்த க் காலத்தில் இவரைப் புடலங்காய், இங்கே வா என்று பெரியவர்கள் அழைத்துப் பரிகசிப்பார்களாம்.

மோகனூர் வந்தது

இவருக்கு ஆறு வயதாகும்போது இவருடைய மூத்த தங்கை மதுகரவேணி என்பவர் கிருஷ்ணராயபுரத்தில் பிறந்தார். அந்த ஊரில் எழுந்தருளியிருக்கும் அம்பிகை யின் நாமம் மதுகரவேணி என்பதாகும் (மதுகரம் என்றால் வண்டுகள். வேணி-கூந்தல்; வண்டுகள் மொய்க் கின்ற கூந்தலையுடையவள். இதைத் தமிழில் தேனார் குழவி என்பர்), அந்த அம்பிகையின் பெயரையே இவ ருடைய மூத்த தங்கைக்குச் சூட்டினார்கள்,

இவருடைய தந்தையார் முறையாக எதையும் படித் தவர் அல்லர். உத்தியோகம் என்று எதுவும் இல்லை. ஏழு பிள்ளைகளுக்கிடையே பிறந்தவர். தகப்பனாரின் ஆஸ்தி யும் சொற்பமே. வாசுதேவ ஐயர் இரண்டு குழந்தை களுக்குத் தந்தையானதும் குடும்பத்தில் சில சச்சரவுகள் எழுந்தன. கொஞ்சம் முன்கோபக்காரராக இருந்ததால் மிகுந்த பொருள் நஷ்டம் எதிர்பாராச் சம்பவங்களினால் ஏற்பட்டது.இதனால் கிருஷ்ணராயபுரத்தில் அவர்களால் தொடர்ந்து இருக்க முடியவில்லை. ஏதாவ்து ஒரு தொழி லில் ஈடுபட வேண்டுமென்ற நிலை ஏற்பட்ட்து. காவேரிக்கு அக்கரையில், சேலம் மாவட்டம் நாமக்கல் வட்டத்திலிருக்கும் மோகனுாருக்குத் தம் குடும்பத்துடன் வந்து குடியேறினார். t