பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 5 நாம் அறிந்த கி. air.

தட்சிண வாகினி

மோகனூரின் பழையபெயர் முகவனூர் என்பதாகும்: முகவன் என்றால் நாட்டாண்மைக்காரன் என்று பெயர்: மதுரையில் திருமலைநாயகர் ஆண்ட காலத்தில் அவ ருடைய பிரதிநிதியாக ஒருவர் இங்கே இருந்தார் என்று தெரிகிறது. அவர் மண்ணாலே ஒரு கோட்டை க்ட்டி அதில் வாழ்ந்து வந்தார். நாளடைவில் அந்தக் கோட்டை சிதைந்துவிட்டது. இப்போதும் அது ஒரு பெரிய மேடாக இருக்கிறது. அதைக் கோட்டைமேடு என்று சொல்லுகிறார்கள்.

அந்த ஊரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு * அசல தீபேசுவரர்” என்று பெயர், அங்கே காவேரி வடக்கிலிருந்து தெற்கே போகிறது. அதனைத் தட்சிண வாகினி என்றும் சொல்வார்கள். அங்கிருந்து காற்று அடித்தால் சிவலிங்கப் பெருமானுக்கு அருகிலுள்ள விளக்கு சிறிதுகூட அசையாது. ஆகையினால் இறைவ. னுக்கு அசல திபேசுவரர்” என்று பெயர். மிச்ர திபேசுவரர்’ என்ற பெயரும் வழங்கும்,

காந்த மலை

மோகனூரில் காந்த மலை என்ற ஒரு சிறு குன்று இருக்கிறது. அங்கே முருகன் தண்டபாணி திருக்கோலத் தில் எழுந்தருளியிருக்கிறான். கோவிலைக் கட்டும்போது அங்கே மண்ணைத் தோண்டினார்களாம்; காந்தம் பிடித்துக்கொண்டதாம்; அதனால் காந்த மலை என்ற பெயர் அதற்கு உண்டாயிற்று.

காவலடியான் கோவில் -

அந்த ஊரில் இரண்டு நாவல் மரங்களுக்கு நடுவில் சிறிய பள்ளத்தில் சதுரக் கல்லுடைய ஒரு மூர்த்தி எழுந் தருளி இருக்கிறார். அதனால் அவருக்கு நாவலடியான்” என்று பெயர். அந்த இரண்டு நாவல் மரங்களும் இன்று