பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி I 6

வாடிப்போன நிலையில் இருக்கின்றன. அங்கே பெரிய கோவிலைக் கட்ட வேண்டுமென்று தொடங்கி, சில துரண் ‘களை எழுப்பினார்கள். ஆனால் அந்த மூர்த்தி, தமக்கு அது வேண்டாமென்று கனவில் சொல்லிவிட்டாராம், ஆகையால் பழைய இடத்திலேயே அவரது திருவுருவம் உள்ளது.

கடன் கொடுத்தவர்கள் அந்தப் பணம் திரும்ப வில்லை என்றால் அந்த முறையீட்டை ஒலையில் எழுதி நாவலடியான் கோவிவில் கட்டுவார்கள்; பழங்காலம் முதல் இது வழக்கத்தில் இருந்து வருகிறது. அந்தக் காலத் தில் எழுதிய பனையோலைகளும், இந்தக் காலத்தில் எழுதிய காகிதங்களும் அங்கே தொங்குகின்றன. இந்த முறையீட்டைக் கேட்டு அந்தப் பெருமானுடைய திருவருளால் கொடுத்த கடன் மீண்டும் திரும்பும் என்ற நம்பிக்கை பலருக்கு இருக்கிறது. அது பலித்தும் வருகிறது. -

பழைய காலத்தில் அந்தக் கோவிலில் ஆடுகளைப் பலியிடுவார்கள் என்றும் சொல்கிறார்கள். இப்போது எல்லாப் பலியும் நின்றுவிட்டன. . . . . -

நாமக்கல்லில் ராமையர் என்ற வக்கீல் ஒருவர் இருந்தார். அவர் இறக்கும் தறுவாயில் அந்தக் கடவுளை .ே வ ண் டி க் கொண்டதால் பிழைத்தெழுந்தாராம். அதனால் அவருக்கு நாவலடி ராமையர் என்ற பெயர் வந்தது. அவருடைய பிள்ளைகளும் அந்தப் பெயரைச் சேர்த்தே வைத்துக்கொள்கிறார்கள். - அவரவர் கொடுத்து வைத்தது

அங்கே எழுந்தருளியிருக்கும் சிவபெருமானைக் ‘குமரீசுவரர்’ என்றும் சொல்வதுண்டு. மு. ரு க ப் பெருமானைக் கண்டவுடன் அம்பிகையின் தனங்களில் பால் வழிந்ததாம். அப்படி வழிந்தது இப்போதும் சிறு துரம்பாகக் காவேரியில் கலக்கிறது என்பதாக ஐதிகம்3 அந்தத் துறைத் தண்ணிரில் பால் வாசனை மணக்கும்: