பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 7 நாம் அறிந்த கி. வா. ஜ.

ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சுற்று வட்டாரத் திலுள்ள மக்கள் அல்லாரும் அங்கே வந்து காவேரியில் நீராடி இறைவனை வழிபடுவார்கள். அப்போது பெருங் கூட்டம் சேர்ந்திருக்கும். புதிய புதிய கடைகள் எல்லாம் வைத்திருப்பார்கள். அவர்களுக்கு நல்ல வியாபாரம், நடக்கும்.

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் ‘கொங்குதன் குமரித் துறையாடியன்’ என்ற ஒரடி வருகிறது. அங்கே வருகிற கொங்குதன் குமரி என்பது இந்தத் தலத்தைக் குறிப்பதாகச் சிலர் சொல்வதுண்டு. t

காவேரிக்கு அக்கரையில் நெருர் என்ற ஊர் இருக் கிறது. அதற்கு ஒரு திருப்புகழ்ப் பாடலும் உண்டு. மோகனூர்க்கோவிலில் உற்சவங்களும் கொட்டு மேளமும் மிகச் சிறப்பாக இருக்கும். அக்கரையில் இருக்கும் நெரூரிலுள்ள சுவாமி, குமாரீசுவரரே, உமக்குக் கொட்டும் மேளமும் எவ்வளவு சிறப்பாக இருக்கின்றது’ என்று சொல்வி ஆச்சரியப்படுவார் என்பார்கள். அதற்கு இங்கிருந்து, அவரவர்கள் கொடுத்து வைத்தது’ என்று பதில் வருமாம். இப்படி ஒரு வழக்கு அங்கே நிலவி வருகிறது. -

நெரூரில் சதாசிவப் பிரம்மேந்திர சுவாமிகளுடைய சமாதி இருக்கிறது. அவருடைய குருநாதரின் சமாதி மோகனூரில் காவேரிக் கரையில் அமைந்திருக்கிறது. ஆனால் பாதுகாப்பு இல்லாமையினால் அது சிதைந்து கிடக்கிறது. - - , o

மோகன் என்பவன் இருந்ததால் இந்த ஊருக்கு மோகனூர் என்று பெயர் வந்ததாகவும் சிலர் சொல் வார்கள். அது சரியன்று முகவன் ஊர் என்பதே அதன் பழைய பெயர். - t பரிசல் துறைச் சேவுையர்

அப்போது மோகனூரில் சேவுையர் என்ற மிராசு தார் இருந்தார். அவருக்குக் கொஞ்சம் நிலம் இருந்தது.