பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி I &

அதைச் சாகுபடி செய்து வந்தார். அதோடு காவேரிப் பரிசல் துறை குத்தகையும் அவரிடந்தான் இருந்தது. பரிசல் தள்ள ஆட்களை வைத்திருந்தார். பரிசல் துறையி லேயே உட்கார்ந்துகொண்டு பரிசலில் போவோர் வருவோரிடம் கட்டணம் வசூலித்துக் கொண்டிருப்பார்: நல்ல செல்வாக்குள்ள மனிதர். பிறருக்கு உபகாரம் .ெ ச ய் ய வேண்டுமென்ற ஈர நெஞ்சத்தினராகவும் இருந்தார். அவர்தாம் மோகனூர் அக்கிரகாரத்தின் ஒரமாக முதன்முதலில் ஒரு சிறிய ஒலை வீட்டைக் கட்டிக் கொடுத்து அங்கே இவருடைய (கி.வா.ஜ)தந்தையாரைத் தம் குடும்பத்துடன் இருக்கச் செய்தார்.

மேலும் அந்தக் காலத்தில் காப்பி ஒட்டல்கள் இல்லை. எனவே, அந்த ஊரில் இவருடைய தந்தையார் காலை நேரத்தில் இட்டிலி காபி விற்கும் சிறுகடை ஒன்றை நடத்த ஆரம்பித்தார். -

கொஞ்சம் காசு பணம் சேர ஆரம்பித்ததும் மோக னுTரில் ஒரு மச்சு வீட்டைச் சொந்தமாகக் கட்டிக் கொண்டார் இவருடைய தந்தை.

மோகனூரில்தான் இவருடைய மற்ற இரு தங்கை களாகிய மங்களமும், மீனாட்சியும், தம்பி பாலசுப்பிர மணியமும் பிறந்தார்கள். இவர் சிறுபிள்ளையாக இருந்து விளையாடி, வளர்ந்த இடம் மோகனூர்தான். அதுவே இவரது ஊர் ஆயிற்று.

பிற்காலத்திலும் இவருடைய ஆசிரியப்பிரான் ஸ்ரீமத் ஐயர் தம் பதிப்புகளில், அதற்கு மிகவும் உதவியவர்கள் யார் யாரென முகவுரையில் குறிப்பிடும்போது, மோக னுார்த் தமிழ்ப் பண்டிதர் கி. வா. ஜகந்நாதன்’ என இவரை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.

- அதனால் தம் குடும்பத்திற்குப் புகலளித்த மோகனூ ருக்கு நிலைத்த பெருமையை இவர் தேடித் தந்தவராகி விட்டார்.