பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 நாம் அறிந்த கி. வா. ஜ:

இணைபிரியா கண்பர்கள்

மோகனூர்ச் சேவுையருக்கு ஒரே ஒரு மகள், அவளுக்குச் சிறப்பாகத் திருமணத்தை நடத்தினார்; மாப்பிள்ளை பம்பாயில் நிர்ணயசாகர் அச்சகத்தில் வேலையாக இருந்தார். மகளுக்கு ஒரு பிள்ளை பிறந்தது. குழந்தை பிறந்த ஆறு மாதத்தில் சேவுையரின் மகள் இறந்துவிட்டாள். மாப்பிள்ளை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். சேவுையர் தம் பெண் வயிற்றுப் பேரனைத் தம்மிடமே வைத்துக்கொண்டு வளர்த்தார். அந்தப் பையனின் பெயர்தான் செல்லம், கி.வா.ஜ. மோகனூருக்கு வந்தபின் செல்ல த், துடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தார். இவரைவிடச் செல்ல ம் ஆறு, ஏழு மாதமே பெரியவர். -

சேவுையருக்கும் தம் பேரன் செல்லம் இவருடன் பழக ஆரம்பித்தது மிக்வும் பிடித்துவிட்டது. ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’ என்பதை நினைத்தோ என்னவோ இவரிடமும் அவர் அதிகமான பரிவு காட்டத் தொடங்கினார்.

பெரும்பாலும் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்தே இருப்பார்கள். மோகனூர்க் காவேரிக் கரையிலிருந்த சிவன் கோயில் மண்டபத்தில் ஏறி விளையாடுவார்கள். மோகனூரில் ஆரம்பப் பள்ளி ஒன்றுதான் இருந்தது. இவர்கள் இரண்டு பேரும் அந்தப் பள்ளியில்தான் நான்காவது வகுப்புவரை சேர்ந்து படித்தார்கள். - கந்தர்வக்கோட்டை வாசம் - -

மேலே அந்த ஊரில் படிப்பதற்கு அப்போது வசதி யில்லை. மோகனூரண்டையில் காவேரிக்கு அக்கரையி லிருந்த வாங்கல் என்ற ஊருக்குச் சென்று படிக்க வேண்டும். - -

இவருடைய சிறிய தாயார் அப்போது கந்தர்வக் கோட்டையில் இருந்தார். ஒரு முறை அவர் மோகனூர்