பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி м 20

வந்திருந்தபோது, குழந்தை தினமும் காவேரி தாண்டிப் போய்ப் ப டி ப் ப த | வ து 1 என்னிடம் வைத்துக் கொள்கிறேன். எங்கள் ஊர்ப் பள்ளிக்கூடஆசிரியர் ஒருவர் நம் வீட்டில்தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அவரே இவனைக் கொண்டுபோய்த் தம் பள்ளிக்கூடத் தில் சேர்த்துவிடுவார். இவனும் அவருடன் தினமும் பாதுகாப்பாகப் பள்ளிக்குப் போய்வர மு டி யு ம் ’’ என்றார். -

அது நல்ல யோசனையாக இவருடைய பெற்றோர் களுக்கும் தோன்றியது.

இவருக்கு என்னவோ தம் நண்பர் செல்லத்தைவிட்டுப் பிரிய மனமில்லை. என்றாலும், அந்த ஆண்டு இவரை அழைத்துப் போய்க் கந்தர்வக்கோட்டைப் பள்ளிக் கூடத்தில் ஐந்தாம் வகுப்பில் சேர்த்துவிட்டார்கள். வெங்கட்டராமையரின் அன்பு

கந்தர்வக்கோட்டைப் ப ஸ் ரி க் கூ ட ஆசிரியர் வெங்கட்டராமையர் இவருடைய சிறிய தகப்பனாரின் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அங்கு இவர் போனவுடனே இவரிடம் அவருக்கு ஒரு தனி அபிமானம் ஏற்பட்டுவிட்டது. தினமும் நிறையக் கதைப் புத்தகங் களை எடுத்து வருவார்; இவரை உரக்கப் படிக்கச் சொல்வார்; உணர்ச்சியோடு இவர் ப டி ப் ப ைத க் கேட்பதில் அவருக்குப் பிரியம் அதிகம்.

கதைகளை அவருக்குப் படித்துக் காட்டும்போது, சில சமயம் இவர் அப்படியே மவுனமாகி அந்தக் கதையில் ஆழ்ந்துவிடுவார். சோக உணர்ச்சி மிகும் இடங்களில் வார்த்தைகளை விம்மலோடு படிப்பார். ஹாஸ்யமான இடங்கள் வரும்போது சிரித்து எழுந்து குதித்து உட்கார்ந்து படிப்பார். இவர் படிப்பதைப் பார்க்கும் போது வெங்கட்டராமையருக்கும் மகிழ்ச்சி உண்டாகும். ‘உம்...உ.ம்... மேலே படி எனக் குரல் கொடுத்துக் கொண்டே இருப்பார்.