பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 நாம் அறிந்த கிறு வா. ஜ:

ஒரு முறை அந்த ஆசிரியர், பத்மாவதி சரித்திரம்’ என்கிற நாவலை எடுத்து வந்தார். அதை அவருக்கு. இவர் படித்துக் காட்டினார். அவர் மிகவும் சுவாரஸ்ய மாகக் கேட்டார். --

அந்த நா வ ைல இவர் படித்துக் காட்டிக் கொண்டிருந்தபோது பள்ளிக்கூடத்திற்குப் பல நாள் நேரம் கழித்தே இவர்கள் இரண்டு பேரும் போவதுண்டு. ஒரு நாள் தலைமையாசிரியர் சுப்பராவிற்கு அந்த ஆசிரியரிடத்தில் கோபம் வந்துவிட்டது. ஐந்தாம் வகுப்புப் படிக்கிற பிள்ளையை நாவல் படிக்கச் சொன்னால் அவன் படிப்பில் எ ப் ப டி நன்றாக முன்னேறுவான்?’ என அவரைப் பார்த்து உறுமினார். அவரை அடிக்க முடியுமா? இவரை ‘அறுந்த தந்தி'ஆக்க முயன்றார்.

இவரை இழுத்து, முதுகில் அடித்து, ‘பத்மாவதி: யைத் தேடிக்கொண்டு ஒடு’ என்று திட்டினார். அந்த ஆசிரியருக்கு மிகவும் மனவேதனையாகிவிட்டது:

பலரும் கேட்டு இன்புறும்வண்ணம் இவரது குரலொலி யாழ்’ ஆகவேண்டும், யாவரும் படித்து மகிழ்ச்சி கொள்ளும்வண்ணம் இவரது சொந்த வளமான கற்பனை தூண்டப்பட்டு, ‘கவிஞன் காதல்’, ‘பவழ மல்லிகை மலர்களாக வேண்டுமென அந்த ஆசிரியப் பெருந்தகையின் உள்ளம் விழைந்ததோ என்னவோ?

அதற்குப் பிறகும் வெங்கட்டராமையர் கதைப் புத்தகங்கள் எடுத்து வருவதை நிறுத்தவில்லை; இவரை விட்டுக் கதைகளைத் தொடர்ந்து படிக்கச் சொல்லிக் கேட்பதையும் நிறுத்திக்கொள்ளவில்லை.

கதைகளை அவருக்குப் படித்துக் காட்டும்போதே, இவருக்கும் தாம் சொந்தமாகக் கதை எழுதவேண்டும்,

  • ரீமான் கி.வா.ஜ. அவர்களுடைய சிறுகதைகளின் தொகுப்புகள். -