பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி - 22

கவிதை எழுதவேண்டுமென்ற உணர்ச்சி பிஞ்சு நெஞ்சிலே

தளிர்விடத் தொடங்கிவிட்டது.

இவர் கந்தர்வக்கோட்டையில் ஒராண்டு தங்கி, 5-ஆம் வகுப்புப் படித்தார். இவரைப் பிரிந்திருக்க இவருடைய தாயாரால் முடியவில்லை. தந்தையார் கந்தர்வக்கோட்டையில் இருந்த இவரைத் திரும்பவும் மோகனூருக்கே அடுத்த ஆண்டு அழைத்து வந்து

விட்டார். 纷

பிரிந்தவர் கூடினர்

வாங்கலில் இருந்த உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் இவரை 6-ஆம் வகுப்பில் சேர்த்தார்: ந ண் பர் செல்லமும் அந்தப் பள்ளியில்தான் சேர்ந்திருந்தார். திரும்பவும் இவர்கள் இரண்டுபேரும்சேர்ந்தே பள்ளிக்குப் போகத் தொடங்கினார்கள்.

இவர்களுக்கென்றே செல்லத்தின் பாட்டனார் காலையில் தனியாகப் பரிசல் விடச் சொல்வார்; அதில் மற்றச் சாதாரணப் பயணிகள் ஏற அநுமதிக்கமாட்டார். மோகனூரிலிருந்து வாங்கல் போய்ப் படித்து வந்த குழந்தைகள் அனைவரும் அதில் ஏறிப்போவார்கள். பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பும் நேரத்தில் இவர்களுக் காகவே ப ரி ச ல் காத்துக்கொண்டிருக்கும். அதில் இவர்கள் திரும்பி வருவார்கள், !

இவர் கொஞ்சங் கொஞ்சமாகப் பரிசல் தள்ளவும், ஆற்றில் நன்றாக நீந்தவும் கற்றுக்கொண்டார். - இவரால் ஒரு நாழிகை சும்மா வீட்டில் இருக்க முடியாது நிறையக் கதைப் புத்தகங்கள் படிக்கக் கந்தர்வக்கோட்டையில் பழகிவிட்டதால் இங்கும் கதைப் புத்தகங்களைத் தேடிப் போய் வாங்கி வந்து படிப்பது, கந்தரலங்காரம், விவேக சிந்தாமணி போன்ற தமிழ்ப் பாடல்களை எல்லாம் வாய்விட்டுப் படித்து, மனப்பாடம் செய்வது என்றே பொழுதைக் கழிப்பார்,