பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 நாம் அறிந்த கி. வா. ஜ,

இடையிடையே இவராகவே சில பாடல்களைப் புனைந்து செல்லத்திடம் படித்துக் காட்டுவார். “ஏய்டு கவிதை எழுதும் திறமை உன்னிடம் நிறைய இருக்குடா’ என இவர் எழுதும் பாடல்களைக் கேட்டுச் செல்லம் பாராட்டுவார். இவருக்கு அப்பொழுதே, தாம் ஒரு பெரிய தமிழ்க் கவிஞனாக வரவேண்டுமென்ற ஆர்வம் தோன்றியது. -

இவர்கள் இப்படிச் சதா பாடிக்கொண்டும் பேசிக் கொண்டுமே அவ்வூர்ச் சிவன் கோவிலைச் சுற்றி விளையாடுவார்கள். -

இவருடைய பாட்டனார் சுப்பராயர் அடிக்கடி மோகனூர் வருவார். மோகனூரிலுங்கூட அவர் முந்திரிச் செடிகளைக்கொண்டுவந்து பயிரிட்டார்.அவர் ஒரு முறை வந்திருந்தபோது, இவருக்குப் பூணுால் போட்டுவிட வேண்டும் என்றார்கள். அதன்பேரில் இ வ. ரு க் கு உபநயனம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடந்தன.தாத்தா பாட்டி உறவினர்கள் எல்லாரும் வந்திருந்தார்கள்.

உபநயன முகூர்த்த தினத்திற்கு முதல் நாள் இவருடைய தாயார் வீட்டில் இல்லை. எனவே, பாட்ட னார் சுப்பராயரும், பாட்டி சுப்புலட்சுமியும் மனையில் உட்கார்ந்து இவருக்குப் பூணுல் போட்டு வைத்தார்கள். பாட்டனார் சுப்பராயர்தாம் இவருக்குப் பிரம்மோப தேசம் செய்தார். -

குரு தட்சிணாமூர்த்தி -

அந்தக் காலத்தில் பலரும் காவேரிக்குச் சென்று நீராடுவார்கள்; குடத்தில் நீர் முகந்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யக் கொடுப்பார்கள். ஆற்றங்கரையில் இருந்து ஜபம் செய்வார்கள்.

இவரும் செல்லமும், இதுபோலவே ஆற்றில் நீராடிச் செம்பில் காவேரி தீர்த்தம் எடுத்து வருவார்கள். சிவன் கோவிலுக்குள் நுழையும் வாசலில் வலம், இடமாக