பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி 24

இரண்டு பிள்ளையார்கள் உண்டு. ஆ ளு க் .ெ கா ரு, பிள்ளையார் என்று இவர்களே அபிஷேகம் செய்வார்கள்.

அருகம்புல், .ெ கா ன் ைற, தும்பை மலர்கொண்டு

பிள்ளையாருக்கு அலங்காரமும் செய்வார்கள்.

ஒரு நாள், செல்ல ம் துண்டுக் காகிதம் ஒன்றில், ‘ஓம் கணேசாய நம: என்று எழுதிக்கொண்டார். இவர் பஞ்சாட்சரத்தை எழுதிக்கொண்டார்.

இரண்டுபேரும் அவரவர்கள் எழுதிய தாளை ஆற்றங் கரையில் இருக்கும் சிவன் கோவிலில் இருந்த தட்சிணா மூர்த்தி கையில் கொடுத்து அதைத் திரும்ப எடுத்துக் கொண்டார்கள். தட்சிணாமூர்த்தியே அந்த மந்திரத்தை இவர்களுக்கு உபதேசித்ததாகப் பாவித்து ஜபம் செய்ய வும் ஆரம்பித்தார்கள்.

இவருடைய குரு எல்லாமாய், அல்லதுமாய் இருந்த தனை இருந்தபடி இருந்து காட் டி ச் சொல்லாமல் சொன்ன துர்ை தட்சிணாமூர்த்திதான். பாம்பு! பாம்பு :

ஒரு சமயம் செல்லமும் இவரும் ஒரு தோப்பு வழி யாகப் போய்க்கொண்டிருந்தார்களாம். அப்போது இவர் ஒரு பாம்பை மிதித்துவிட்டார். -

செல்லம், ‘பாம்பு! பாம்பு!” என்று கத்தினார். பாம்பு வேறு எங்கோ இருக்கிறது என்று நினைத்து இவர் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு அ ப் ப டி ேய. அசையாமல் நின்றாராம். - * ஏய், உன் காலடியில்தாண்டா பாம்பு’ எனச் செல்லம் குரல் கொடுத்தவுடன்தான் கீழே இவர் காலடி. யில் பாம்பு கிடந்ததைப் பார்த்தார். -

சட்டென்று ஓடிப்போய் வெகு தூரம் தள்ளி நின்று: கொண்டு இவரும், ‘பாம்பு பாம்பு!” எனக் கத்தினாராம். - -

திருவிளையாடற் புராணம்-பரஞ்சோதி முனிவர்