பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

認5 - நாம் அறிந்த கி. வா. ஜ,

சமரசப் பண்பு

மோகனூரில் ஒரு பிராம்மணர் கடை வைத்திருந்தார். அவருக்கு இரண்டு புதல்வர்கள். அவர்கள் இரண்டு பேரும் அடிக்கடி சண்டையிட்டுக்கொண்டார்கள். ஒரு நாள்

அவர்களது சண்டையைத் தீர்த்து வைக்க இவர் அவர்

களுக்கிடையே போய்விட்டார். சண்டையைத் தீர்க்கப் போன இவரை ஒருவன் அடித்துவிட்டான். அடியையும் வாங்கிக்கொண்டு அவர்களது சண்டையை இவர் தீர்த்து வைத்தவுடன் அந்தப் பிள்ளைகளின் தகப்பனார் இவரிடம் வந்து தம் வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டாராம். -

சந்திரமதி வந்தாள்’

ஒரு நாள் இவர் தம் நண்பர்களுடன் ஒரு கடையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதே ஊரிலுள்ள அழகுசுந்தரம் என்பவரைப்பற்றிப் பேச்சு வந்தபோது இவர் சொன்னார்: “அழகு என்றாலும் ஒன்றுதான், சுந்தரம் என்றாலும் ஒன்று தான். அழகு சுந்தரம் என்று பெயர் வைத்துக்கொள்கிறார்களே!’

‘இதுபோல இன்னும் ஒரு பெயர் சொல்லேன்’ எனச் செல்லம் கேட்டாராம். . o இவர் சட்டென்று, ‘சந்திரன் என்றாலும், மதி என்றாலும் ஒன்றுதான். இரண்டையும் சேர்த்துச் சந்திரமதி எனப் பெயர் வைத்துக்கொள்கிறார்கள்’ என்றார். நண்பர்கள் எல்லோரும் சிரித்தார்களாம்.

இப்படித் தமிழ்ப் பெயர்களைத் தனித்தனியே பிரித்தும் சேர்த்தும் பொருள் நயம் காட்டிப் பிறரை மகிழ்விப்பது இவருக்கு ஒரு விளையாட்டு,

இவரது ஊரிலேயே சந்திரமதி என்கிற பெயருடன், கிழவி ஒருத்தி இருந்தாள். அந்த நேரம் அவள் அந்தக் கடைப் பக்கமாக வரவே, அவளது காதிலும் இவர்

நா-2