பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி 26

சொன்னது அரைகுறையாக விழுந்து விட்டது. எல்லாரும் சேர்ந்து சிரிக்கவே தன்னைத்தான் ஏதோ அவர்கள் கேலி செய்வதாக அவள் நினைத்துவிட்டாள்.

அவளது கோபத்தைக் கண்டவுடன் இவருடைய நண்பர்கள் எல்லோரும் தலைக்கொரு பக்கமாக ஒடி விட்டார்களாம். கிழவி இவருடன் சண்டைக்கு வந்து விட்டாள். அன்று என்னவோ இவரது விளையாட்டு இப்படி விபரீதமாகப் போய்விட்டது. சீட்டாட்டம்-பொழுதுபோக்கு.

வாங்கவில் இவரும் செல்ல மும் படித்துக்கொண் டிருந்தபோது இவர்களோடு சங்கரன் என்ற பையனும் படித்துக் கொண்டிருந்தான். அவன்தான் இவருக்கும் செல்லத்திற்கும் சீட்டாடக் கற்றுக்கொடுத்தான்.

ஒரு நாள் யாரும் அறியாமல் இவரது விட்டில் சீட்டாடிக் கொண்டிருந்தார்கள், அப்பொழுது ஒரு பெரியவர் பார்த்துவிட்டார். இவர்களுக்கெல்லாம் மிகவும் அவமானமாகப் போய்விட்டது.

அன்று முதல் சீட்டாடக் கற்றுக்கொடுத்த சங்கரனை இவர்கள் வெறுத்து ஒதுக்கினார்கள். வெளியிலும் சரி, பள்ளிக்கூடத்திலும் சரி அவனோடு பேசுவதில்லை எனத் தீர்மானித்துக்கொண்டார்கள். -

ஒரு நாள் வகுப்பில் ஆசிரியர் இவர்களை அடித்து, ஏன் அவனோடு நீங்கள் பேசுவதில்லை?’ என்று கேட் டார். பல முறை அடித்தமையினால், ‘அவன் சீட்டாடக் கற்றுக்கொடுத்தான்’ என்று சொன்னார்கள். 1. சிட்டாடப் பழகுவது தப்புத்தான். பழகிவிட்டால் வேறு வேலை எதிலும் கவனம் போகாது’ என்று ஆசிரியரும் சொன்னாராம். அதுமுதல் இவர் சிட்டாடு வதை நிறுத்திவிட்டார்: -

. . பிற்காலத்திலும், நன்றாக உழைக்க வேண்டிய பொன்னான நேரம் சீட்டாட உட்கார்ந்தால் வீணாகப்