பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 - நாம் அறிந்த கி. வா. ஜ.

போய்விடுகிறது. அதனால் சீ ட்டு மட்டு ம் ஆட வேண்டாம்’ என இவர் தம் நண்பர்களிடம் சொல்வ: துண்டு.

ஆயினும் இவர் தமது வயது முதிர்ந்த காலத்தில் அபூர்வமாகச் சில சமயங்களில் தம் குடும்பத்தினருடன் சீட்டு விளையாடுவார்.தம் குடு ம்பத்தினருடன் வேடிக்கை

யாக அளவளாவுவதற்காக இதைக் கைக்கொண்டார் போலும்,

கண்பரை மீட்டது

கல்கி’ அவர்கள் அலையோசை’ என்ற புதினத்தை எழுதினார்கள். அதில் சீதா படகிலிருந்து விழுகிறாள்.

“தண்ணிருக்குள் கீழேகீழே போய்க்கொண்டிருந்தாள். பிறகு தன்னுடைய பிரயாசையின்றியே மேலே வருவதை உணர்ந்தாள். முகம் தண்ணிருக்கு மேலே வந்தது.’

அதைப் படித்துக்கொண்டே வந்தபோது, ஏதேது கல்கியே தண்ணிரில் மூழ்கிவிட்ட அநுபவத்தை அடைந் திருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது’’ என அன்பர் கி. வா. ஜ, சொன்னார்.

கல்கி வரலாற்றை எழுதிய சுந்தாகூட, ‘கி.வா.ஜ. வின் ஊகம் சரியானதே எனக் குறிப்பிட்டுள்ளார். கி.வா.ஜ. கல்கியின் கதையைப் படித்து வரும் போது அப்படிச் சொன்னதற்குக் கா ர ண ம் சிறுவயதில் அத்தகைய அநுபவத்தை இவர் காண நேர்ந்ததேயாகும்.

வாங்கலில் இவரும் செல்லமும் அப்போது எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார்கள், ஒரு நாள் இருவரும் காவேரிக்கு நீராடச் சென்றார்கள். ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த இவர்கள் அக்கரையை நோக்கி நீந்த ஆரம்பித்தார்கள். முன்னால் செல்லமும், பின்னால் இவரும் நீந்திப் போனார்கள் அந்த இடம் நல்ல ஆழம்; நீர் வேகமும்கூட.