பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி 2 &

கொஞ்ச தூரம் போவதற்குள்ளேயே இவர் கை சளைத்தது. செல்லம் திரும்பி வாடா, கரைக்குப் போகலாம்’ என இவர் திரும்பிக் கரையை நோக்கி நீந்த ஆரம்பித்தார். .

கரைக்குச் சென்று திரும்பிப் பார்த்த இவருக்கு ஒரே பயமாகப் போய்விட்டது. செல்லத்தைக் காணவில்லை. ‘ செல்லம், செல்லம்’ என்று கத்தினார்.

இவர் கரையை நோக்கி நீந்த ஆரம்பித்ததைப் பார்த்துங்கூடச் செல்லம் திரும்பவில்லை. மேலே நீந்திக் கொண்டே போனார். கொஞ்ச தூரத்தில் அவர் கையும். சளைத்துவிட்டது, காலை ஊன்றிப் பார்த்தார், நிலை கொள்ளவில்லை . . -

தண்ணிருக்குள் அவர் தலை மூழ்கிப் போகிறது, திரும்பவும் மேலே தெரிகிறது. இப்படித் தண்ணிரில் மூழ்கி எழுந்துகொண்டே அவர் ஆற்றோடு போவதை இவர் கண்டார்.

அந்தப் பயங்கரக் காட்சி இவர் உடலை உலுப்பிற்று. பரிசல் துறையில் அமர்திருந்தார் செல்வத்தின் தாத்தா: அவரிடம் அலறிக்கொண்டே ஓடி வந்து, “தாத்தா, செல்லத்தைக் காப்பாற்றுங்கள்! அவன் ஆற்றில் மூழ்கிப் போகிறான்’ என இவர் சொன்னார்.

பரிசல் துறையிலுள்ள பெரிய பரிசல்கள் பயணிகளை ஏற்றிக்கொண்டு இக்கரைக்கும் அக்கரைக்கும் போய்க் கொண்டிருக்கும். ஆனால் புல் கட்டுகள் ஏற்றுவதற்கும், மீன் பிடிப்பதற்கும் பயன்படுத்தும் ஆறடி விட்டமே யுள்ள சிறிய வேட்டைப் பரிசல் எப்பொழுதும் கரையில் கட்டப்பட்டிருக்கும். - ~. . . *

‘செல்லம் ஆற்றோடு போகிறான். அவனைக் காப்

- பாற்றுங்கள்’ என இவர் கத்திய சத்தத்தைக் கேட்ட வுடனேயே கரையிலிருந்த இரண்டு ஆட்கள் வேட்டைப் பரிசலை அவிழ்த்துவிட்டுக்கொண்டு மிக வேகமாகச்