பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 நாம் அறிந்த கி. வா. ஜ.

சென்றார்கள். ஆற்றின் கரையோரமாக மற்றவர்கள் ஒடி வந்தார்கள். -

செல்ல த்திற்குக் கை சளைத்தாலும், நீந்தத் தெரிந்த வர் ஆதலால் காலை ஊன்றி ஊன்றித் தண்ணிரில் மூழ்கிப் போகும்போது நல்ல வேளையாக ஓரிடத்தில் அவர் கால் தரையில் தட்டுப்பட்டது. காலை ஊன்றி நின்றார். என்றாலும் தண்ணtர் அவர் மோவாய்க்கட்டை வரை இருந்தது, நீரின் வேகத்தினால் அவரால் அந்த இடத்தில் நிலைகொள்ள முடியவில்லை. கணேசா, கனேசா” எனக்கத்தினார் o - -

வேட்டைப் பரிசலில் சென்ற ஆட்கள் அவரைப்

பிடித்துத் தூக்கிப் பரிசலில் போட்டுக்கொண்டு கரைக்குக் கொணர்ந்தார்கள். செல்லம் உயிர் தப்பினார். ...”

‘பெண்ணைத்தான் இழந்தோம்; அவள் செல்வத்

தையுமா இழக்கப் போகிறோம் எனப் பதைபதைத்துப் போன சேவுையருக்கு அப்புறம்தான் மூச்சே வந்தது.

- மிகுந்த நன்றியுணர்வோடு இவரது முதுகைத் தடவிக் - கொடுத்து, “பயப்படாதே! நீதான் உன் நண்பனைக் காப்பாற்றிவிட்டாயே! ஏன் அழுகிறாய்?’ என இவருக் குத் தைரியமும், ஆறுதலும் சொன்னாராம். கிருஷ்ணராயபுரத்தில்

வாங்கல் பள்ளியில் எட்டாவது வகுப்புக்குமேல் அப்போது இல்லை. எனவே, மேலே படிப்பைத் தொடர் வதற்குச் சேவுையர் தம் பேரன் செல்லத்தைச் சேலத் திற்கு அனுப்பிவிட்டார். - - -

இவரை இவருடைய பெற்றோர் கிருஷ்ணராயபுரத் திற்கு அனுப்பிவைத்தார்கள். அங்கே இவருடைய மாமா நாராயண கனபாடிகள் இருந்தார். அவரது வீட்டில் இருந்துகொண்டுதான் இவர் தம் மேல்படிப்பைத் தொடர்ந்தார். -