பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி 3 గ్రా

அஞ்சா நெஞ்சம்

கிருஷ்ணராயபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஒன்று உண்டு. அந்தக் கோவிலுக்கு, குழந்தைகளாக இருந்த இவர்கள் யாரையும் போகக் கூடாது என்று சொல்லு வார்கள். அந்த இடத்தைப் பற்றி ஒருவிதமான பயம் இவர்களுக்கு இருந்தது.

தம் பயத்தைப் போக்கிக்கொள்ள இவர் கையாண்ட முறை என்ன தெரியுமா?

ஒரு நாள் யாரும் இல்லாத சமயம் அந்தக் கோவிலுக் குச் சென்றார், அங்கே ஒரு செங்கல் தான் நடப்பட்டிருந் தது. செல்லியம்மன் என்பதாக மஞ்சள், குங்குமம் எல்லாம் பூசப்பட்டிருக்கும் அந்தக் கல்லைத் தொட்டுத் தம் கண்ணில் ஒற்றிக்கொண்டார். உடனேயே திரும்பி வந்துவிட்டார். இவருக்கு ஒன்றும் ஆகவில்லை.அப்புறம், “செல்லியம்மன் கோயிலில் என்ன இருக்கிறது? அங்கே ஒரு செங்கல் தானே புதைக்கப்பட்டிருக்கிறது? அது நம்மை என்ன செய்யும்?’ என நினைத்துக்கொண்டு அங்கே போய்வரத் தொடங்கினார். இவருக்குப் பயம்

ஏற்பட்டதே இல்லை.

இவர் தாம் எதற்கும். எங்கும், எப்பொழுதும் அஞ்சா திருக்கும் மனத் திண்மையைத் தம்மிடம் தாமே வளர்த் துக்கொள்ளத் தொடங்கிவிட்டாரே! -

குளித்தலையில் படித்தது

கிருஷ்ணராயபுரத்தில் மேல்நிலைப் பள்ளி ஏதும் இல்லை. எனினும் ரெயில் வசதி இருந்ததால், அவ்வூர்ப் பிள்ளைகள் ரெயிலில் குளித்தலை சென்று படித்து வந்தார்கள். ... “

கர்நாடக மாநிலத்தில் கிருஷ்ணராஜபுரம் என்பதாக ஓரிடம் இருப்பதால் இந்தக்கிருஷ்ணராயபுரம் ரெயில்வே ஸ்டேஷனுக்குச் சித்தலவாய்’ என்று பெயர் வைத்தார்