பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 நாம் அறிந்த கி. வா. ஜ.

கள். திருச்சி-கரூர்-ஈரோடு மார்க்கத்தில் இது உள்ளது. கிருஷ்ணராயபுரம் கடைத்தெருதான் சித்தலவாய்.

சித்தலவாய் ஸ்டேஷனிலிருந்து குளித்தலை 12

மைல்கள் இருக்கும். இவரும் தம் மாமா வீட்டில் இருந்து கொண்டு தினமும் ரெயிலில் குளித்தலை சென்று படித் தார்.இவர் 4, 5, 6-ஆம் பாரங்கள் படித்தது குளித்தலை யில்தான். ஐந்தாவது பாரத்தில் அப்போது இரண்டு பாடங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். விருப்பப்பாட மாகத் தமிழை எடுத்துக்கொள்ளும்படி சிலர் சொன் னார்கள். பள்ளிக்கூடத்தில் படிக்கிற தமிழில் பாடல்கள் அவ்வளவு அதிகமாக இல்லையே. அதற்காக வேறு பாடத்தைப் படிக்கிற வாய்ப்பை வீணாக்குவா னன்’ என்ற எண்ணம் இவருக்கு வந்தது.

இவருக்குக் கணிதம் என்றால் மிகவும் பிரியம். ஆகவே, ‘பள்ளிக்கூடத்தில் படிக்கிற தமிழை நாமே படித்துக் கொள்ளலாம். பள்ளிக்கூடத்தில் உருப்படியாக ஏதேனும் படிக்க வேண்டும், என்று தம் விருப்பப் பாட மாகக் கணிதம், பெளதிகம் இரண்டையும் எடுத்துக் கொண்டார். அவற்றில் முதல் மார்க் வாங்குவார். தமிழ் இலக்கியத்தில் ஆர்வம்

தனிப்பாடல் திரட்டுப்போல, விவேக சிந்தாமணி’ என்ற ஒரு நூல் உண்டு. அதிலுள்ள பாடல்கள் எல்லாம் இவருக்கு மனப்பாடம்:

சித்தல்வாய் என்ற ஊரிலிருந்து குளித்தலை என்ற

ஊருக்கு ரெயில் போகிறபோதெல்லாம் இவர் சும்மா கதை அளக்கிற வழக்கம் இல்லை. “விவேக சிந்தாமணி’ பாட்டைச் சொல்லி அர்த்தம் சொல்லிக்கொண் டிருப்பார். இவரோடு படிக்கிறவர்கள் எல்லாம் இவரைச் சுற்றிக்கொள்வார்கள். அதில் .ெ ப ண் க ளு ைட ய வர்ணனை எல்லாம் வரும். அதை இவர்சொல்லும்போது இவருடைய நண்பர்களுக்கெல்லாம் கிளுகிளுப்பாய் இருக்கும்.