பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 164

மகிழ்வித்தீர்கள். சென்னைக்குத் தாங்கள் சென்ற பிறகு தங்களைக் கண்டு பழக முடியாதது, எங்களுக்குத் துன்பமாக உள்ளது. மீண்டும் இந்தப் பக்கம் தாங்கள் வந்துவிடுங்கள். தாங்கள் என்ன சம்பளம் கேட்டாலும், எங்கள் சங்கத்திலிருந்தே கொடுக்கிறோம்’ என எழுதினார்.* .

அதைப் படித்தபோது இவருக்கும் ஊர் ஞாபகம், அன்பர்களின் நினைவு எல்லாம் வந்தன. சிட்டுவண்டாக எங்கும் சுற்றித் திரிந்து கொண்டிருந்துவிட்டு, சென்னை .யில் ஒரு தனி அறையில் சிறைப்பட்ட மாதிரி இருப்பது என்னவோ போலத்தான் இருந்தது.

அடுத்த நிமிடமே ஐயரவர்களின் நினைவு வந்தது. அவரைவிட்டுப் போவதற்கு இவருக்கு மனம் வரவில்லை; எனவே, கணபதிபாளையம் வருவதற்கு இயலாதுள்ள

நிலையை விளக்கிக் கடிதம் எழுதிவிட்டார்,

ஆசானின் அரவணைப்பு

ஐயரவர்களும் இவரைச் சிறிது .ே ந. ரங் கூ ட ப் பிரிந்திருக்க விரும்பவில்லை.

சில நாட்களில், பெரும்பாலும் fa} நேரங்களில் ஐயரவர்கள் உலாவிவிட்டு வருவது வழக்கம்.

‘உலாவி வர என்று வேறு எங்கும் போக மாட்டார். அவரது இல்லம், திருவேட்டீசுவரன் பேட்டையில் கோவிலுக்குத் தெற்கு வீதியில் அமைந் திருந்தது. அந்தத் தெருவின் மேற்கு மூலையில் ரிக்ஷாக்கள் இருக்கும். அந்த ரிக்ஷா ஸ்டாண்டு அருகில் ஒரு கிழவி இட்டிலி விற்றுக்கொண்டிருப்பாள். k

ஐயரவர்கள் காலை நேரத்தில் உலாவக் கிள்ம்பி வருகையில் முதலில் அந்த இடத்திற்கு வருவார்


நவநீதகிருஷ்ண பாரதி.