பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 - நாம் அறிந்த கி. வா. ஜ.

அவரைக் கண்டவுடன் கி ழ வி ேய , ‘ இன்னிக்கு எவ்வளவுக்கு இட்டிலி வேண்டும்?’ என்று கேட்பாள்.

ஐயரவர்கள் ஒரு முறை தம்மைச் சுற்றிப் பார்த்து விட்டு, ‘இன்றைக்கு நாலணாவுக்குத் தா’ என்பார். அந்தக் காலத்தில் ஓர் இட்டிலி காலணா. கிழவிழ, கூடையிலிருந்து பதினாறு இட்டிலியை எடுத்துத் தட்டில் வைப்பாள். -

உடனே ஐயரவர்கள் ரிக்ஷாக்காரர்களின் பக்கம் - திரும்புவார். குழந்தை குட்டிகளுடன் அவர்கள் ஓடிவரும். போது ஆ ளு க் .ெ கா ரு இட்டிலியாகக் கொடுக்கும்படி ஐயரவர்கள் கிழவியிடம் சொல்லுவார். அந்த இட்டிலி விநியோகம் ஆனவுடன் கிழவியிடம் சில்லறையைக் கொடுத்துவிட்டு அந்த இடத்திலிருந்து கிளம்புவார்.

இட்டிலி விற்கும் கிழவியும் சரி, அந்தத் தெரு மூலை யில் குடியிருந்த ரிக்ஷாக்காரர்களின் குடும்பமும் சரி அவரை ஒரு .ெ த ய் வ த் ைத ப் பார்ப்பதுபோல் பார்ப்பார்கள், -

காலை நேரத்தில், அந்த மக்கள் இட்டிலியை வாங்கி. உண்பதைப் பார்க்கும்போது அன்பர் கி.வா.ஜ-வுக்கு. ஐயரவர்களின் செயல் கண்களில் நீர்துளிக்கச் செய்யும்,

அப்படியே மேற்கு வீதி, வடக்கு வீதி, கிழக்கு விதி. எனச் சிவ்ாலயத்தை ஒரு முறை வலம் வந்துவிடுவார், ஐயரவர்கள். அந்தச் சமயத்திலும், தம்முடன் வருபவர் களுக்குச் சுவையான சில தனிப்பாடல்களைச் சொல்லி நயம் விளக்கி வருவார். இரண்டொரு வீட்டில் தெரு. வோரமாகப் பூத்திருக்கும் அரளி, பவழமல்லிகை, பன்னிர்ப் புஷ்பம் போன்றவற்றையும் த்ம் பூஜைக்காக எடுத்து வருவார். -- - - -

அன்று ஆசானுடன் அன்பர் கி.வா.ஜ. உலாவப் போகவில்லை. ஒரு வாரமாகவே இவருக்கு உடம்பு சரி யில்லை, அதோடு முதல் நாள் இரவுதான் தாம் எழுதிய