பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 166

மாயூரநாதர் கோவில் கும்பாபிஷேகப் பத்திரிகையை ஆசானிடம் காட்டி, அவர் செய்த சில திருத்தங்களோடு நல்ல தாளில் வேறு பிரதி எழுதிக் கொடுத்துவிட்டு வந்தார். ஜாகைக்கு வரும்போதே நேரமாகிவிட்டது: காலையில் வழக்கம்போல் இவரால் எழுந்திருக்க முடியவில்லை. உடம்பு அனலாகக் காய்ந்தது. கைகால் களில் மூட்டுக்கு மூட்டு ஒரே வலி ஆசானுக்கு தெரிவித்து அவரைக் கவலைக்குள்ளாக்க வேண்டாமென்று பேசாம லிருந்துவிட்டார். அன்று முழுதும் ஆசானின் வீட்டுக்கு இவரால் போக முடியவில்லை. -

ஆசானான ஐயரவர்களே மறுநாட் காலையில்

“டொக் டொக்” என்று பூண்போட்டதம் கைத்தடியை ஊன்றிக்கொண்டு, இவரைத் தேடி இவரது ஜாகைக்கு வந்துவிட்டார். - -

நெடிய உருவம்: சாந்தமான பார்வை; சிறிய தொந்தி; தூய பஞ்சக்கச்ச வேஷ்டி இடுப்பைச் சுற்றிக் கட்டிய அங்கவஸ்திரம்: திருநீறு பூசிய செம்மேணி. ஜகந்நாதா என்கிற அவரது கணிரென்ற குரலைக் கேட்டவுடன் இவர் வாரிச் சுருட்டிக்கொண்டு, பாய் படுக்கையை அப்பால் தள்ளிவிட்டு மெல்ல எழுந்தார்.

“உடம்பு சரியில்லையா? சொல்லி அனுப்பினால் என்ன?’ என்று கேட்டுக்கொண்டே ஐயரவர்கள் உள்ளே வந்தார். தம் இடுப்பு வேஷ்டியில் செருகியிருந்த பளபள வெனத் தங்கம்போல் மின்னும் விபூதிச் சம்புடத்தை எடுத்து இவரது நெற்றியில் விபூதிய்ைப் பூசினார்

கையில் கொடுத்த அந்தத் திருநீற்றை இவர் தம் வாயிலே கொஞ்சம் போட்டுக்கொண்டு, தம் மார்பிலும் பூசிக் கொண்டார். -

இவரது நெற்றியை ஐயரவர்கள் தொட்டபோது, நெருப்பாய்க் கொதிப்பதை உணர்ந்தவுடன், நல்ல ஜூரம் அடிக்கிறது. அதோடு இந்த அறையில் நீ தனியே