பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.69 நாம் அறிந்த கி.வா.ஜ.

இங்கே செளக்கியமாக வந்து சேர்ந்தோம். வைத்தியர் கொடுத்த மருந்தைச் சாப்பிட்டு வருகிறேன். அவ்விடத்து உபதேச மொழிகளும், செவியுணவும் பெறா வறுமையும் தம்பி* முதலியவர்களுடைய பிரிவும் எப்போதும் என் நெஞ்சத்திற்கு வருத்தம் ஈந்துகொண்டே இருக்கின்றன. எனினும் அவ்விடத்து ஆசீர்வாத வன்மையினாலும்; முருகன் திருவருளாலும் விரைவில் எனது உடம்பு சீர்ழ் பட்டு அங்கு வந்து சேரக்கூடும் என்ற நம்பிக்கை இருக் கிறது. கேட்ட பாடங்களைச் சிந்தித்தலும், உடம்பு நன்னிலைக்கு வருவதற்குரிய காரியங்களைச் செய்தலுமே என்னுடைய பொழுதுபோக்கு என்னுடைய நமஸ்காரங் களை அண்ணாவுக்கும், சிற்றப்பாவிற்கும் என்னுடைய ஞாபகத்தைக் கோதண்டராமையர், சி. தம்பி, நாயகர் முதலியவர்களுக்கும் சொல்லும்படி பிரார்த்திக்கிறேன். சதா அவ்விடத்து ஞாபகமாகவே இருக்கிறேன். ‘வழங்கு கின்றாய்க்கு நின்னரு ளாரமுதத்தை வாரிக்கொண்டு விழுங்கினேன், விக்கினேன் வினையே னென்விதி யின்மையால், தழங்கருந்தேனன்ன தண்ணீர் பருகத் தந்துய்யக் கொள்வாய் அழுங்குகின்றே னுடையாயடியேன் உன்னடைக்கலமேடு -- “ -

விலாசம் இங்ஙனம் கி. வா. ஜகந்நாதன் திருவடிதாஸன் மோகனூர் - கி. வா. ஜகந்நாதன்

கரூர் மார்க்கம். - - * : . . . . . . . . . . . .

இவரது ஆசிரியப்பிரானுக்கு - உவப்பளிக்கும் .பல - சிறப்பியல்புகள் கொண்டதாக இக்கடிதம் அமைந் துள்ளதைக் காண்லாம்: -

பிஇங்கே செளகரியமாக வந்து சேர்ந்தோம், வைத்தியர் கொடுத்த மருந்தைச் சாப்பிட்டு வரு

  • ஐயரவர்களின் பேரர் திரு க.சுப்பிரமணியம். நா-11 . . . . . . . . . . . . . . ... . . -, * : * ~ * .