பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 71 நாம் அறிந்த கி.வா.ஜ.

காந்தமலையான் கோவில் குருக்கள் அடிக்கடி இவரை வந்து பார்த்து இறைவனது பிரசாதத்தைக் கொடுத்துப் போனார். அபயானந்தர் வந்து பேசிக் கொண்டிருந்தார்.

ஊரில் அப்போது கோவில் திருவிழா நடந்துகொண் டிருந்தது. வீட்டில் இருந்தவண்ணமே தினமும் இவர் சுவாமி தரிசனம் செய்துகொண்டார்.

தேர்விழா அன்று சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து வந்திருந்த அன்பர்கள் பலரும் இவரையும் வந்து பார்த்து பேசிப் போனார்கள் தங்கள் தங்கள் ஊர்களுக்கு வரு மாறும் இவரை அழைத்தார்கள். தம்பி, தங்கையர் தாயார் ஆகியோர் இவர்மீது அன்பைப்பொழிந்தார்கள் இவரது உடம்பு படிப்படியாக நன்கு குணமாகியது. பின்பு இவர் சேந்தமங்கலம் சென்றார். தம் உடையார் நண்பர் களையும், காசி சுவாமிகளையும் பார்த்தார். ஸ்ரீமத் சுயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமி , களையும் தரிசனம் செய்துகொண்டார்g

சேந்தமங்கலம். ஜமீன்தார் ஐராவத உடையார்

இவருக்காக ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். இவர் அந்த ஊரில் இரண்டொரு நாள் தங்கித் திருப்புகழ் பற்றியும், முருகன் அருள்பற்றியும் பேசினார். பக்திச் சொற்பொழிவுகள்

பின்னர்க் குமாரபாளையம் சென்றார். அங் ‘குகப்படலம் பற்றிப் பேசினார். அடுத்து பாள்ைப் பட்டி சென்று போர்டு ஸ்கூலில் அயோத்தியா:காண்டம் பற்றிப் பேசினார். அன்பர்கள் பலரும் இவரைப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பேசச் சொன்னார்கள் 3 *

‘உடம்பு சரியில்லையென வந்த பிள்ளை. வீட்டில் தங்கி உரிய வேளைக்குச் சாப்பிட்டுக்கொண்டு. உடம்பைக் கவனித்துக்கொள்ளாமல் இப்படி ஊர் ஊராகத் திரும்ப வும் சுற்ற ஆரம்பித்துவிட்டானே! என்று தாயார், வருந்தினார்டு - ... ‘’ . . . . . . ......’ ... •

aso

-