பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 224

.ெ த ரி ந் து .ெ கா ண் டேன். ஸ்ந்தோஷமுமடைத்தேன். செய்யுட்கள் நன்றாக இருக்கின்றன. அவற்றை என் விஷயம்ாக எழுதியிருப்பதுதான் ஒரு குறை. நிற்க...

நான் அயலூர் போயிருந்தமையால் உடனே விடை யனுப்பக் கூடவில்லை. சிரஞ்சீவி கல்யாணசுந்தரம் எழுதிய கடிதம் கிடைத்திருக்குமே! அதிற் கண்டபடி தாம் தாமதித்து வரக்கூடுமானால் குறுந்தொகையைத் தபால் மூலம் இவ்விடத்திற்கு அனுப்பிவிடுக. உரியவர்கள் கேட்கிறார்களாம். வேறு பிரதியொன்று விரைவில் அனுப்பும்படி ஒரு நண்பரிடம் சொன்னேன். சில தினத்தில் வந்துவிடும்.

மாயூரம் கடைமுக ஸ்நானத்திற்கு முன்னதாகவே வரும்வண்ணம் ஆதீனகர்த்தரவர்கள் கட்டளையிட்டமை யால் சனிக்கிழமை மாலை வண்டியிற் புறப்பட்டு மாயூரம் செல்ல உத்தேசித்திருக்கிறேன். டிக்கட்டு வாங்கியாயிற்று. ஸ்நானத்திலும், ஸ்தல வாஸ்த்திலும் மிகுந்த ஆசையே.

கார்த்திகை மீ முதலில் அங்கிருந்து இங்கு வருவேன். ஆதலால் தாம் தந்தையாரவர்கள் விருப்பின்படி இருக்க வேண்டியளவு அங்கேயிருந்துவிட்டு அப்பால் இவ்விடத் திற்கே வந்துவிடலாம்; அதற்குள் வருவதாக இருந்தால் ம்ாயூரத்திற்கே வந்துவிடலாம். பெரியவர்கள் சொல் கிறபடி செய்க. ரீமான் ஐராவத உடையாரவர்களைப் பார்த்ததுண்டா? பரமஹம்ஸ் ராமசந்திர யதீந்திரர் கள்ைத் தரிசித்திருக்கக் கூடுமே!

தேக ஸ்திதி செளகர்யமாக இருக்கிறதா? நிற்க, அகராதியில் ருஉ-ஆம் பாரம், ப த ப் பி க் க உத்தரவு கொடுத்தாயிற்று. தாமதத்திற்குக் காரணம் அச்சா பீலே. கல்யாணசுந்தரத்தின் வி லா ஸ த் தி ற் கே குறுந் தொகை'யை ரிஜிஸ்தர் செய்து அனுப்புவதுடன் அவனுக்கே கடிதமும் எழுதுக. நெடுந்தொகையைத் தந்தையாரவர் களுக்குத் தாம் இங்கு வந்தவுடன் அவன் அனுப்புதல்