பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

339 தாம் அறிந்த கி.வா.ஜ.

விரும்பலாம். அந்த வேலையைத் தாம் இவருக்குப் பண்ணி வைக்க விரும்பவில்லை என்கிற குறை பின்னால் வரக் கூடாது’ என்கிற முடிவுக்கு வந்தார் பூரீமத் ஐயர். - என்னிடம் தமிழ்ப்பாடம் கேட்டுக்கொண்டு ஒரு பையன் இருக்கிறான். இந்தப் பதவிக்கு அவன் ஏற்ற வனே. எதற்கும் அவனையும் கலந்துகொண்டு அவன் விரும்பினால், தங்களை வந்து பார்க்கச் சொல்கிறேன்” என பூரீமத் ஐயர் சொல்வி அவரை அனுப்பிவிட்டார்.

அன்று வெளியிலிருந்து இவர் திரும்பி வரும்போது பூரீமத் ஐயர் சற்று ஒய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அவரை எழுப்பாமல், இவர் தம் வழக்கம்போல் தக்க யாகப் பரணி அகராதியை எழுதத் தொடங்கினார். பூரீமத் ஜயர் உறக்கத்திலிருந்து எழுந்துவிட்டதைக்கூடக் கவனிக்கவில்லை. இவரருகில் அவர் வந்தபோதுதான். இவர் சட்டென்று கவனித்து எழுந்தார், - -

“பெரம்பூர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ப் பண்டிதர் வேலை ஒன்று காலியாகிறதாம். உனக்கு அந்தப் பணியைச் செய்து வைக்கலாம் என்று உள்ளேன்’ என ரீமத் ஐயர் இவரிடம் சொன்னார். இவரது உளநிலை அப்போது எவ்வாறு இருந்தது என்பதை விளக்குவது, பின்கண்ட பழையதோர் நிகழ்ச்சி: - - சிவனடியார்களின் பெருமையைக் கூற வந்த சேக்கிழார் பெருமான், கூடும் அன்பினில் கும்பிடவேயன்றி. வீடும் வேண்டா விறலினர்’ என அவர்களது பண்பைக் சொல்வார்.

இப்படியும் இருப்பார்களா?’ என்று இந்தக் காலத்தில் பலருக்குத் தோன்றக் கூடும். காரணம், ‘முன்னுக்கு வந்தான்’ என்றால் பணத்தை லட்சம் லட்சமாகக் குறுகிய காலத்தில் எப்படி எப்படியோ சம்பாதித்துக்கொள்கிறவனைத்தான் இன்றைய உலகம் மதிக்கிறது. .