பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - 246

அந்தக் காலத்தில் திருவாரூர் பூர் தியாகராஜப் பெருமான் கோவிலில் ஒரு தட்டுவனார் இருந்தார். அவர் எப்போதும் விபூதி, ருத்திராட்சம் தரித்துக்கொண்டே விளங்குவார். தியாகேசனிடம் மிகுந்த பக்தி கொண்டவர். சாயங்கால போராதனையைத் திருவந்திக்காப்பு” என்பார்கள். தி ரு வ ந் தி க் கா ப் பின் போது பலவகை வாத்தியங்களை வாசிப்பார்கன். அதில் ஒன்று சுத்த மத்தள வாத்தியம்.

பூரு தியாகேசரின் சந்நிதியில் தடைபெறும் திருவந்திக் காப்பைக் கண்டு கணிக்க அடியார்கள் ஆவலுடன் காத்திருப் பார்கள். அதைத் தரிசிப்பது மிகவும் விசேஷம். அத்தலத்து இறைவனுக்குத் திருவந்திக்காப்பழகர் என்றே ஒரு திருநாமம் உண்டு. -

இந்த நட்டுவனார் திருவந்திக்காப்பின்போது சுத்த மத்தளம் வாசித்து வந்தார்.

ஒரு நாள் திருவந்திக்காப்பு தடைபெறும்போது தஞ்சை மன்னர் வந்திருந்தார். அவரை நட்டுவனார் கவனிக்கவில்லை; பூ தியாகேசர் சந்நிதானத்தில் தம்மை மறந்து சுத்த மத்தளம் வாசித்துக்கொண்டிருந்தார். அவருடைய கண்கள் மூடியிருந்தன. கண்களில் நீர் பெருகி வழிந்துகொண்டிருந்தது.

அவர் தாமாக வாத்தியத்தை நிறுத்தி, கண்ணைத் திறக்கும் வரையில் மன்னரும் அவரருகில் நின்று கொண்டிருந்தார்.

அந்த நட்டுவனார் ஒரு வகையாகத் தம் வாசிப்பைப் பூர்த்தி செய்த பின்பு, பூரீ தியாகராஜப் பெருமானைக் கும்பிட்டுக்கொண்டே கண்ணைத் திறந்தார்.

அருகில் அரசர் திற்பதைக் கண்டவுடன் அவருக்கு அச்சம் உண்டாயிற்று. பயப்படாதே! உனக்கு என்ன வேண்டுமோ கேள்’ என்றார் அரசர் பெருமான்:

  • பூரீமத் ஐயரவர்களின் கட்டுரை: என்ன வேண்டும்?"