பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

艺4五 - நாம் அறிந்த கி.வா.ஜ.

அரசருக்கு அவ்வளவு மகிழ்ச்சி! இந்த நட்டுவனார் எதைக் கேட்டாலும் அந்த நேரம் கொடுத்திருப்பார்.

நட்டுவனாரோ பூரீதியாகராஜாவின் சந்நிதியில், திருவந்திக்காப்பின்போது நான் சுத்தமத்தளம் வாசிக்கும் தொண்டைத் தொடர்ந்து செய்துவரும்படி கட்டளையிட வேண்டும்’ என்றாராம்!

x X X ஆசானின் திருவடியில் தொண்டு

இதுபோலத்தான் அன்று இவரும், அந்த வேலையை வேறு எவருக்கேனும் பண்ணிவையுங்கள். எனக்குத் தங்கள் திருவடியின் கீழ் இருந்துகொண்டு தொண்டு செய்து வர அநுக்கிரகம் பண்ண வேண்டும்’ என்று பிரார்த்தித்துக்கொண்டார்.

அது மிகவும் நல்ல வேலையென்பதால் சொன்னேன். மாதம் 35 ரூபாய் சம்பளம் கிடைக்கும். 60 ரூபாய் வரை வருடத்திற்கு 2 ரூபாய் உயர்ந்து வரும். நீரும் மாதத் தோறும் உமது குடும்பத்திற்குக் கொஞ்சம் பணம் அனுப்பி வைக்கலாம்’ என யூரீமத் ஐயர் திரும்பவும் சொன்னார். எனக்குப் பணத்தில் நோக்கம் இல்லை. என் குடும்ப விஷயங்களைப்பற்றியும் நான் கவலைப்படுவதில்லை. முருகன் திருவருள் யாவையும் கூட்டி வைக்கும்’ எனக் கோஞ்சமும் சலனமில்லாமல் இவர் கூறினார்.

பூரீமத் ஐயர் திரும்பவும், அந்த வேலையை ஏற்றுக் கொள்ளணும்’ எனச் சொன்னவுடன், நான் இருப்பது இவ்விடத்திற்குப் பாரமாக இருக்குமானால் அவ்வேலையை ஏற்றுக்கொள்கிறேன்’ என்று கண்களில் நீர் துளும்ப உரைத்தார் இவர்.

உம்மைப் பெற நான் பெருந்தவமன்றோ செய்திருக்க வேண்டும்! நீர் எனக்கு எந்தக் காலத்திலும் பாரமே யில்லை. என் ஆயுள் முழுவதும் பின்பும் நீர் என்னுடன் இருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே.