பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - 243’

உம் குடும்பச் செளகர்யத்திற்காகச் சொன்னேனேயொழிய, வேறில்லை’ என்றார் பூரீமத் ஐயர். பிறகு அந்த வேலைக்குப் போகும்படி அவர் இவரை வற்புறுத்த வில்லை.

இது இவருக்கு ஒரு சிறு சோதனை. இவர் அவ்வேலையைப் பெற மறுத்துவிட்டார்!

X Χ - x

‘நெஞ்சிலுள்ள காதல் பெரிது; எனக்குக் காசு பெரிதில்லை’ என்கிற தீவிர பக்தி உணர்ச்சியோடு இவர் பூரீமத் ஐயரிடம் இருந்து வந்தார்.

அந்தத் தமிழ்த் தெய்வத்திடம் இவர் காட்டிய அன்பும் வெளிப்படுத்திய மரியாதையும் பூரீமத் ஐயரது குடும்பத்தில் “இவர் தங்களை அலட்சியப்படுத்துகிறாரோ?’ என்னும் ஐயம் கொள்ள இடந்தரும் அளவுக்கு நிலைமை இருப்பதாக, பூரீமத் ஜயருக்குப் பட்டதுபோலும்! உலகியலில் மிக்க அநுபவம் உடையவராயிற்றே! இந்த நிலை வளர்ச்சி பெற அவர் விடுவாரா? -

ஜாடையாக இவரிடம், இங்கே குடும்பப் பொறுப்பை: யெல்லாம் ஏற்றுக் சரிக்கட்டிக்கொண்டு போகிறவர் அண்ணா. எனவே, எதையும் அண்ணா சொல்கிறபடி செய்ய வேண்டும்; அண்ணாவிடம் சொல்லிவிட்டுப் போக, வேண்டும்’ என அவ்வப்போது உணர்த்தி வந்தார்.

x X X

மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் அறிவுரை என்ன?

புரீமத் ஐயர் தம் ஆசானான பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டு வந்த காலத்தில், அவரிடம் பஞ்சநதம் பிள்ளை என்பவர் தவசிப் பிள்ளையாக இருந்து வந்தார்.

ஒரு நாள் பஞ்சநதம்!’ என்பதாக அவரை பூரீமத் ஐயர் கூப்பிட்டுவிட்டார். .