பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - 244

கணபதி ஐயருடனும் தம் மகனின் திருமணத்தைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.

இவரைப் பார்த்தவுடன், என்ன வேலை நடக் கிறது?’ என்று கேட்டார்.

இவர் பிள்ளையவர்களது சரித்திரம் எழுதப்பட்டு வருவதைச் சொன்னார்.

பூரீ சுப்பிரமணிய தேசிகர் முதலியோர்களுடைய சரித்திரங்களையும், பிள்ளையவர்களின் சரித்திரத்திற்கு அங்கமாக எழுத வேண்டுமென்பது பூரீமத் ஐயரின் விருப்பம். அ த னால் மு. த லி ல் அவற்றையெல்லாம் காலவரையறையாக நீர் ஒழுங்குபடுத்திக்கொண்டு அவரிடம் சொல்ல வேண்டும்’ என்றார் அண்ணா *ஆகட்டும்’ என இவர் சொன்னபோது டிசம்பர் மாதக் குளிரில் இவரது குரல் மட்டுமல்ல, உடலும்

நடுங்கியதைக் கணபதி ஐயர் கவனித்தார் போலும்!

அண்ணா இதைக் கவனிக்கவில்லை. தமிழ் விடு .துாது கையெழுத்துப் பிரதியை அச்சகத்திற்கு அனுப் விடலாமா?’ என்று கேட்டார். -

‘இன்னும் கொஞ்சம் எழுத வேண்டியது பாக்கி இருக் கிறது. எழுதியானவுடன் பூரீமத் ஐயரைக் கேட்டுக் கொண்டு அனுப்பிவிடலாம்’ என்று இவர் சொன்னார்.

“சரி; அதைச் சீக்கிரம் எழுதும்” எனச் சொல்லி, அண்ணா, போய் வாரும் என விடை கொடுத்தனுப்பி விட்டார், -

மறு நாள் பூரீமத் ஜயர், அண்ணாவை தேற்றுப் பார்த்தாயா? என்ன சொன்னார்?’ எனக் கேட்டபோது, இவர் அண்ணாவைப் பார் த் த ைத யும், அவர் சொன்னதையும் தெரிவித்தார். -

பூரீமத் ஐயர் ஏதும் சொல்லவில்லை. அன்று பிள்ளை யவர்களது சரித்திரம் சம்பந்தமான வேலைகளைச் செய்தார்கள்.