பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245 நாம் அறிந்த கி.வா.ஜ.

ஒரு முறை, எழுதப்பட்டதுவரை படிக்கச் சொன்னார் ஆசான். பிள்ளையவர்களின் ச ரி த் திர த் ைத இவர் வாசித்து வருகையில் ரீமத் ஐயர் உணர்ச்சி மேலீட்டால் விம்மி விம்மி அழுதுருகினார். தியாகராச செட்டியாரவரி களின் செய்தி வரும்போது அவரிடம் அடங்கா உவகை. உண்டாயிற்று.

இந்நூல் வெளிவரின் தமிழுலகத்தில் இதுகாறும் இல்லாத வகையில் இது முதலாவதாகத் திகழும் என்றும், இயன்றவரையில் தெரிந்த விஷயங்களை ஒன்றும் விடாமல் மிக விரிவாக எழுத வேண்டும் என்றும் இவர், யூரீமத் ஜயரிடம் சொன்னார். பூரீமத் ஐயரும், அப்படியே. செய்ய வேண்டும்’ என ஆமோதித்தார்.

இவர் பிள்ளையவர்களது சரித்திரம் சம்பந்தமாக கால வரையறைகளை ஒழுங்குபடுத்திப் பழைய கடிதங்களில் கண்ட செய்திகளை அவ்வக்காலத்தின் நிகழ்ச்சிகளோடு பதித்துக்கொண்டார். கிடைத்த பழைய பாடல்கள் பலவற்றை அங்கங்கே சேர்த்துக்கொண்டார்.

அத்தகைய மகாபுருஷருடைய - இணையற்ற கவிதா சார்வபெளமருடைய - சந்நிதியில், குருபரம்பரையில் - ஒட்டிக்கொள்ளப் பெற்றோமே என்னும் களி மிகுதியால் அப்பேற்றை அருளிய முருகப்பெருமானை நினைதார்.

X X . х ஆசானின் உறவினர் காட்டிய அன்பும் அண்ணாவின் பரிவும். அன்று வீட்டிற்குக் கிளம்பும்போது அண்ணாவின் மாப்பிள்ளை கணபதி ஐயர் இவரிடம் வந்தார். பனிக் காலத்தில் இப்படிச் சட்டை போடாமல் இருந்தீர்க ளானால் முடக்குவாத நோய் வராமல் என்ன செய்யும்? எனக்காகத் தயை செய்து இந்தச் சட்டைகளை இரவு நேரத்திலாவது அணிய வேண்டும்’ எனச் சொல்லி இவருக்காகத் தாம் புதிதாக வாங்கி வைத்திருந்த, இரண்டு ஃப்ளானால் சட்டைகளை அளித்தார்.