பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

247 - நாம் அறிந்த கி.வா.ஜ.

இவர் எதுவும் பேசாமல் அந்தத் தொகையை வாங்கிக் கொண்டு ரீமத் ஐயரிடம் வந்தார். அவரிடம் அந்தப் பணத்தைக் கொடுத்து, இந்தொகையைப் பெற நான் தகுதி உடையவன் அல்ல’ என்றார்.

உமக்குத் தகுதியில்லையென யார் சொன்னது?. உம்முடைய தகுதி இதைவிட இன்னும் அதிகமானதே, பிற இடங்களில் இருந்தால் இதைவிட அதிகமாகக்கூட உம்மால் சம்பாதிக்க முடியும். இனி மாதந்தோறும் நீர் உம் தாயாருக்குக் கொஞ்சம் பணம் அனுப்பிவைக்கச் செளகர்யமாக இருக்க வேண்டுமென்பதே நம் நோக்கம் : என இவரிடம் பூரீமத் ஐயர் சொன்னார். .
  • பெற்ற தாயாருக்கு உதவுவது என் கடமையே. அதனைப் பிறர்பால் சுமத்துவது அடாது. இவ்விடத்தில் கல்வி பயில எனக்குத் தாங்கள் அதுக்கிரகம் செய்ததே பெரும் பாக்கியமாகும். அதற்குக் கைம்மாறாக நான் தங்களுக்கு என்ன செய்ய முடியும்? எனக்கு இதுவரை எவ்விதக் குறையும் இங்கு இருக்கவில்லை. தங்களிடம் இப்பொழுது சகல செளகரியங்களோடுதானே இருக் கிறேன்’ என இவர் சொன்னார். - . “
உமக்கு ஒருவிதக் குறைவும் இருக்கக் கூடாது என்பது தான் நமது எண்ணம். நீர் நடந்துகொள்வது ஒரு சார்பில் நியாயமே. எனினும், உமக்கு உதவி செய்ய நாங்களும் கடமைப்பட்டவர்களே. இந்தப் பணத்தை எடுத்துக் கொள்ளவேண்டும்’ என பூரீமத் ஐயர் வற்புறுத்தினார்.
பணத்தைப்பற்றிய தொடர் பு எப்பொழுதும் என்னுடைய மனத்திற்குத் துன்பத்தையே தருகிறது. தான் பணத்தைக் குறிக்கோளாகப் பெற்றிருப்பேனானால் இங்கே வந்திருக்கமாட்டேன்’ என இவர் விம்மினார்.
எனக்குத் தெரியும், உம்முடைய அருமை. உம்மைப் போன்றவர்கள் எங்களுக்குக் கிடைப்பது சிரமந்தான்: தவம் செய்துள்ளமையால்தான் உம்மை அடையப்