பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛49 நாம் அறிந்த சி.வா.ஜ.

கட்டிக்கொண்டிருக்கையில் அறநெறியல்லாத வழியிற் புகுவதெற்றுக்கோ? அவர்கள் அன்பின் அறிகுறியாக இதனையும், இன்னும் பெரிய தொகையையும் வழங்கலாம். அது அ வ ர் க ளு ைட ய அன்பைக் காட்டுகிறது. அச்செயலுக்குக் காரணமாய அன்பொன்றுக்கு எழு பிறப்பும் கடப்பாடுடையேனாக வேண்டும். அவ்வாறாக, இத்தொகை என்னால் என்றும் வகிக்க முடியாத-அதற் கெதிரன்பையேனும் செயலையேனும் காட்ட இயலாதவகையில் என்னாற் பெறத் தக்கதாமோ? பெறுதலும் அறனா? வழங்குவார் வழங்குவவெல்லாம் பெறுபவன் பெறலாமா? அன்புடையார்பால் ஒன்று பெறினும் அதனாற் பெரும் பயன் பலவாம். அவ்வாறாகப் பலவும் வேண்டியது எற்றுக்கு? அந்த அன்பு ஒன்றே வாழ்விறுதி காறும் நல்வாழ்விலுய்க்குமன்றோ?’

-- இது ஆரம்ப காலத்தில் இவரது உரைநடை எவ்வாறு இருந்துள்ளது என்பதைமட்டுமா எடுத்துக்காட்டுகிறது? அந்த வயதில் இவரிடம் பொதித்து கிடந்த, சலனப்படுத்த முடியாத மனத்திண்மை, ஒருநெறிப்பட்ட மனத்துாய்மை, திட நம்பிக்கை, இறையுணர்வு ஆகிய பல சிறப்பான இயல்புகளையும் அல்லவா உணர்த்துவதாக உள்ளது!

箕 X Y组

ஆசானின் பேரர் திருமணத்தின்போது

பூரீமத் ஐயர், இனிமையாகப் பாடுகிறவர்களைக் கண்டால் அவர்களைப் பாடச் சொல்லிக் கேட்பார். கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல் என்றால் மிகவும் ரசிப்பார். முத்தையா பாகவதர் போன்றவர்களுடைய கதாகாலrேபம் என்றால் முதல் வரிசையில், கடைசி வரை அமர்ந்திருப்பார். இதுதான் அவரது பொழுது போக்கு.

மாயூரத்தில் அவர் பார்த்து நிச்சயித்த பெண்ணுக்கும், அவருடைய பேரர் சுப்பிரமணியத்திற்கும், ராமாநுஜ தா-16